மதிப்பிற்குரிய அய்யா நல்லாசிரியர் இரா. உமையொரு
பாகம்
மதிப்பிற்குரிய அய்யா நல்லாசிரியர் இரா. உமையொரு பாகம்
இன்று (06-09-2013)
78 வது பிறந்தநாள் காணும்அய்யா இரா.உமையொரு பாகம்
அவர்களுக்கு சல்யூட்
சார் உயரத்தில் மட்டும் அல்ல உள்ளத்தாலும் உயர்ந்தவரே
அய்யா அவர்கள் தோற்றத்தில்
எளிமையாகவே காட்சியளிப்பார்கள். அவரது மூக்கு கண்ணாடி முழுக்கை வெள்ளை நிற சட்டை,
எட்டு முழம் வெள்ளை நிற வேஷ்டியுடன் காட்சியளிப்பார்கள். மிகவும் எதார்த்தமாகவும்,
எளிமையாகவும் பேசுவார்கள்.பாடம் நடத்தும் போது கையில் சிறிய குச்சியுடன்
இருப்பார்கள்.அதை பெரும்பாலும் மாணவர்களை அடிக்க பயன்படுத்த மாட்டார்கள். 06-09-1935 ஆம் ஆண்டு
குலசேகரபட்டினத்தில் உதயமானார்கள். 1960
ஆம்ஆண்டு வீரவநல்லூர் தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக
தனது கல்வி பணியை துவங்கி 11-07-1973 ஆம் ஆண்டு தமிழாசிரியராக மேலப்பாளையம் முஸ்லிம் மேல்
நிலைப்பள்ளியில் பணியை தொடங்கிய அய்யா அவர்களுக்கு 05-09-1993
ஆம் ஆண்டு கல்விபணியினை
பாராட்டி தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தது.
மறுநாள் 06-09-1993 ஆம் ஆண்டு தனது கல்விபணியினை நிறைவு செய்கிறார்கள். சார் அவர்கள்
நமதூருக்கு கிடைத்த வரப்பிரசாதமே ஆகும். அவரது ஓய்வுக்கு பிறகு வந்த மாணவர்களுக்கு
அவரது பணி ஓய்வு பெறும் இழப்பே ஆகும்.
கம்பராமாயனம் நடத்தும் போது வகுப்பறை மிகவும் அமைதியாக
இருக்கும். அந்த அமைதியான சூழ்நிலையை அற்புதமாக பயன்படுத்தி அண்ணலும்
நோக்கினான் அவளும் நோக்கினாள் என்ற வாசகம் சொல்லும் போது அவருடைய முக பாவனை
இன்றும் நம் கண் முன்னே தோன்றுகிறது.
சீறாப்புராணம் நடத்தும் விதமே தனியானது
தமிழ் பாடத்தில் சார் நடத்தும் ஒவ்வொரு பகுதியும் கஷ்டபட்டு
அல்ல இஷ்டபட்டே நடத்துவார்கள். அதற்கு காரணம்
தமிழ் மீது அவர் கொண்ட காதலே ஆகும்
இப்படியே எத்தனையோ உதாரணங்கள் சொல்லி கொண்டே போகலாம்
சேரன்மகாதேவியில் தமிழ் பேரவை முன்னாள் செயலாளராகவும் நல்லாசிரியர்
கழக திருநெல்வேலி மாவட்ட செயலாளராகவும், திருநெல்வேலி மாவட்ட தமிழ் பேரவை
துணைச்செயலாளராகவும் பணியாற்றினார்கள்
அவரது பணி விண்ணில் மின்னக்கூடிய ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கிடையே
முழு நிலவைப்போல மின்னியவர்
அவரது பிறந்தநாளான இன்று (06-09-2013) கைப்பெசியிலே பேசியது மன நிறைவைத்தருகிறது அதே
கணீர் குரலுடன் இன்று சென்னையில் இருந்து நம்மோடு பேசினது மகிழ்ச்சியளிக்கிறது. சார் அவர்களை குறிச்சிக்கு சென்று நாம் காண சென்ற போது நமக்கு உதவியாக இருந்தவர் கணேசமூர்த்தி அவர்கள் அவர்களுக்கு உங்கள் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்
அவரது வாழ்நாளின் ஆரோக்கியத்திற்காக நாம் அனைவரும் பிராத்திப்போம் அன்னாரின் மறுஉலக வாழ்க்கையின் வெற்றிக்கும் சேர்த்தே
அய்யா அவர்கள் மாணவ செல்வங்களுக்கு அவர்கள் கைபட எழுதியமடல்
மாணவர்கள் மாண்பு
அறுசீர்விருத்தம்
சாலப் பெரியப்
புகழ் மதிப்பும்
சிறந்த பேரும்
கொண்டுதிகழ்
மேலப்
பாளையம் பெருநகர்
மேன்மை ஓங்கும்
இஸ்லாத்தின்
ஞாலப்
பெருங்கல்விச் சாலை
முஸ்லிம்
மேன்னிலைப் பள்ளி
சீலம்
மிக்க மாணவர்கள்
எந்தன் சிந்தை கவர்ந்தாரே
நல்ல பண்பு
மிக்கவர்கள்
நாளும் அன்பு நிறைந்தவர்கள்
சொல்ல இனிக்கும்
பண்பிணர்கள்
சோர்வில் லாதே
உழைப்பவர்கள்
அல்லல்
துயரம் அழிப்பவர்கள்
அறிவுக் கூர்மை பெற்றவர்கள்
கல்விக்
கண்கள் கொண்டவர்கள்
எந்தன் கருத்தைக்
கவர்ந்தாரே
நேரிசை வெண்பா
மாணவ நல்ல மணிகளே
ஒழுக்கமது
பேண உயர்வாய்
பெரியோர்கள்- காண
மகிழ்வார்கள் உன்னை
மணத்தில் இருத்தி
புகழ்வார்கள்
பாரில் பெரிது
இரா.உமையொருபாகம்
Mohideen Abdul Jabbar
nalla
பதிலளிநீக்கு