மைதீன் லெப்பை சார்
மேலப்பாளையம் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியின் ஓய்வு பெற்ற
தமிழாசிரியர் மைதீன் சார் அவர்கள் 07-05-1933
ஆம் ஆண்டு பிறந்தார்கள். 1960 ஆம் ஆண்டு தனது கல்விபணியினை தான் பிறந்த மண்ணில்
தொடங்கினாலும் இரண்டு வருடங்கள் கரூர் மாவட்டம் கருவேலம்பட்டியில் கல்விபணியாற்றிய
பின்பே முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் சேர்ந்தார்கள்.
சார் அவர்களின் கல்விபணி
மகத்தானது. பள்ளிகூடத்திற்கு சைக்கிளில் தான் வருவார்கள். பெரும்பாலும் வெள்ளை நிற
சட்டை வேஷ்டியுடன் சாதரணமாக காட்சியளிப்பர்கள். அவர்கள் கழுத்தில் கர்சிப் வைத்து
இருக்கும் அழகே தனி தான்
மாணவர்களை வாயா ஜம்புலிங்கம்
எனவும் இன்னும் ஏலே செல்லக்குட்டி எனவும் அழைப்பது தனி அழகே ஆகும்
சந்தோஷ தருணத்தில் என்ன ஒய்
வாரும் ஒய் என அழைக்கும் ஒய் என்ற பேச்சு வழக்கில் இருப்பதும் மகிழ்வாக இருக்கும்.
மைதீன் சார் அவர்கள் வகுப்பு
ஆரம்பிக்கும் போது மாணவர்களுக்கு புரிதோ, புரிய வில்லையோ பத்து நிமிடம்
ஆங்கிலத்தில் உரையாடி ஆங்கில மொழியின் மோகத்தை இளம் மாணவர்களின் மனதில் பதிய வைக்கின்ற
முயற்சி அலாதியானது
மைதீன் சார் அவர்கள் பாடம்
எடுக்கும் போது பக்கத்தில் ஓவிய வகுப்பு எடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் மறைந்த
ஓவிய ஆசிரியர் மரியாதைக்குரிய ரஹ்மான் சார் அவர்கள் மைதீன் சார் அவர்கள் மாணவர்களிடம் பேசும்
ஆங்கில உச்சரிப்பை தன்னை மறந்து ரசிப்பார்களாம். அவர்கள் மட்டும் ரசித்து மனதில்
வைக்காமல் சக ஆசிரிய பெருமக்களிடமும் தலைமையாசிரியர் ஷேர் அலி கான் அவர்களிடம்
சொல்ல அனைவரும் மைதீன் சார் அவர்களின் ஆங்கில புலமையை ரசித்து இருக்கிறார்கள்.
இன்னும் அனைத்து மாணவர்களும்
அவர்களின் ஆங்கில பேச்சின் ஸ்டைலை தெரிந்துகொள்ள வேண்டுமே என நினைத்தார்கள். ஆம்
சுதந்திரதின விழாவில் மைதீன் சார் அவர்களை ஆங்கிலத்தில் பேச தலைமையாசிரியர்
பணித்தார்கள். மிகவும் அற்புதமாக ஆங்கிலத்தில் சரளமாக வெளுத்துகட்டினார்களாம்.
மாணவர்களுக்கு புரியுமா என சார்
அவர்களிடம் வினவினார்களாம் அவர்களுக்கு புரிய வேண்டாம் மாணவர்கள் பேச்சியினை
கேட்டு அவர்களுக்கு ஆங்கில மொழி மீது ஆசையை நாம் ஏற்படுத்த வேண்டும் என தனது உயர்ந்த
எண்ணத்தை வெளிபடுத்தினார்களாம்.
சக ஆசிரியர்கள் எல்லோரிடமும்
முறைவைத்து பழகும் தன்மையை கொண்டுஇருந்தார்கள். மாப்பிளை மச்சான் உறவு சொல்லி
அழைப்பது. சக ஆசிரியர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்க முன் நிற்பது
சார் அவர்கள் தமிழ்வகுப்பு
எடுப்பதே தனி அழகு மாணவர்கள் பிழையில்லாமல் எழுதுவதற்கு தனி கவனம்
செலுத்துவார்கள். டிக்டேசன் கொடுத்து இலக்கண பிழை இல்லாமல் எழுத கடும் பயிற்சி
கொடுப்பது தவறாக எழுதினால் பின் பகுதியில் சட்டைகம்பு வைத்து அடியும் விழும். அந்த
அடிக்கு பயந்து மாணவர்கள் அவர் வகுப்பில் ஒழுங்கு முறையாக இருப்பார்கள்.
இப்படியாக அவர்களின் கல்விபணி 31-05-1991 ஆம் ஆண்டு நிறைவு
செய்தார்கள். கற்று கொடுக்கும் பணியினை நிறைவு செய்தாலும் சார் அவர்கள் இன்றும் நமக்கு முன்மாதிரியாக
இருக்கிறார்கள். சார் அவர்களால் வேகமாகவும் தொடர்ச்சியாகவும் நடக்க இயலாது. ஆனால் ஐந்து
வேளை தொழுகைகைக்கு முடியாத நிலையிலும் மெதுவாக நடந்து பள்ளிவாசல் வந்து தொழுகிறார்கள்.
சார் அவர்களின் இந்த மனபக்குவம் அவர்களின் மாணவர்களாகிய நமக்கு முன்மாதிரியே ஆகும்
சார் அவர்களை காண நாம் வீட்டுக்கு சென்ற போது
காலை நேரம் தலையில் தொப்பியணிந்து கையில் தஸ்பி மணியை வைத்து திக்ரு செய்த
நிலையிலே பார்த்தோம். அந்த காட்சி மனதிற்கு ஒரு இனம் புரியாத சந்தோசத்தை அளித்தது.
நம்மை வரவேற்று பழைய ஆசிரிய பெருமக்களை அவர்களின் பாணியிலே மாப்பிள்ளை மச்சான்
உறவு சொல்லி விசாரித்த விதமும் நம் மனதை நெருடியது
சார் அவர்களின் கல்விபணி
பள்ளி வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்து இருந்தது சிறப்பே ஆகும்.
சார் அவர்களுக்கு ஒரு ஆணும் மூன்று
பெண்மக்களும் உள்ளார்கள்.
இன்னும் சார் அவர்கள் பழையமாணவர்களை
கண்டால் சார்வாள் என செல்லமாக அழைப்பதையே தனது பாணியாக வைத்து இருப்பது சிறப்பே
ஆகும். கடந்த ஆண்டு சார் அவர்களின் கல்வி பணியினை பாராட்டி காயிதேமில்லத் விருதினை
மேலப்பாளையம் நகர முஸ்லிம் லீக் சார்பாக கொடுத்து கவுரவித்ததை நம்மிடம் சொல்லி
நினைவு கூர்ந்தார்கள்.
மாணவர்கள் ஆங்கிலம் இந்தி
உருது மொழியினை கற்று கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார்கள்.
சார் அவர்களின் நீண்ட ஆயுளுக்கும்
சரீர சுகத்திற்கும் நாம் துவா செய்வோமாக ஆமீன்.
Mohideen Abdul Jabbar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக