செவ்வாய், 24 செப்டம்பர், 2013

மேலப்பாளையத்தின் சின்னவர்



71 யிலும்  17
SEVENTY ONE யிலும் SEVENTEEN

               

               

                சின்னவர் என சக ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் அன்போடு அழைக்கபடுபவர்கள் யூசுப் சார் அவர்கள்.
              சிம்மக்குரலுக்கு சொந்தக்காரர். சார் அவர்களின் பணிக் காலத்தில் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாவட்ட அளவில் பல பள்ளிக்கூடங்களில் நடந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்று அதிக அதிகமான கோப்பைகளை வென்று சாதனை புரிந்துள்ளது.
                மாணவர்களை கோசப்பயலே என கம்பீரத்துடன் கர்ஜிப்பார். அந்த கர்ஜனை இன்றும் நம் காதுகளில் ஒலித்துகொண்டே இருக்கிறது. அவர் பல சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கியவர்.
               சார் அவர்கள் தனது கல்வி பணியினை 1962 ஆம் ஆண்டு விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள தூய மேரிஸ் பள்ளிகூடத்தில் ஆரம்பித்து 1963 ஆம் ஆண்டு மேலப்பாளையம் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியில் சேர்ந்து முப்பத்தாறு ஆண்டுகாலங்கள் தனது கல்விபணியினை மிகச்சிறப்புடன் ஆற்றி உள்ளார்கள். அதோடு நின்று விடாமல் இன்று வரை அந்த பணி மூன்றாவது தலைமுறையையும் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் முப்பத்தாறு ஆண்டு காலம் பணியாற்றிய பெருமை சின்னவரையே சாரும்.
            சார் அவர்கள் உடற்பயிற்சி பெற்ற விதமே தனி தான் சார் அவர்களை உருவாக்கிய ஆசிரியபெருமக்கள் அப்துல்காதர், வெங்கடேஷன் ஆவார்கள். பள்ளி பருவத்திலே சாப்ட் பால் மற்றும் பேஸ்கட் பாலில் கிங் .இன்றும் மாவட்ட அளவில் சாப்ட்பாலில் சார் அவர்களே கிங். நடுவராக மாவட்ட அளவில் சிறப்பாக பணிபுரிந்து பல பள்ளிகூட ஆசிரிய பெருமக்களின் பாராட்டை பெற்ற பிதாமகன்.
              சார் அவர்கள் மைதானத்திற்கு சாட்ஸ்,டிசர்ட் அணிந்து தலையிலே தொப்பியும்,கழுத்தில் விசில் தொங்க விட்டு வரும் அழகே தனி. மைதானத்தில் வந்து விட்டால் மாணவர்கள் போலவே காட்சியளிப்பார். சார் அவர்கள் மார்ச் பாஸ்ட் சொல்லி கொடுக்கும்  ஸ்டைலை பார்த்து விட்டு விளையாட்டுதினத்திற்கு வருகை தரும் முக்கியக்கியஸ்தர்கள் அனைவருமே சார் அவர்களின் ரசிகராகவே மாறிய சம்பவங்கள் பல உண்டு.
                 சார் அவர்களின் பணிகாலம் பள்ளிக்கூட  விளையாட்டுத் துறையின் பொற்காலமே.  
           கோபம் இருக்கும் இடத்தில் நல்ல குணம் இருக்கும் என்பார்களே அதை சார் அவர்களிடம் காணலாம்
           மாணவர்களை உரிமையோடு கண்டிக்கும் வேளையில்   உரிமையோடு அரவணைக்கும் குணமும் இருப்பது சார் அவர்களுக்குரிய தனி சிறப்பாகும்.
            ஒரு முறை பிரையர் செய்வதற்கு ஆள் பற்றாக்குறை ஆனதால் ஒரு மாணவனை சார் அவர்கள் பிரையர் செய்ய அழைத்த போது அந்த மாணவன் என்ன நினைத்தானோ தனது பேனாவில் உள்ள நிப்பால் சார் அவர்களை குத்தி விட்டான். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்  மத்தியிலே ஒரு வகை பதட்டம். சார் அவர்கள் அவருக்கே உரிய பாணியில் ஒன்றும் இல்லை என கூறி அந்த மாணவனை தேடினார்கள் அந்த மாணவனோ அங்கு இல்லாமல் பயந்து ஓடிவிட்டான். சக ஆசிரியர்கள் அனைவருமே அந்த மாணவன் மீது கோபத்தில் இருந்த போது சார் அவர்கள் எல்லா ஆசிரியர்களையும் சமாதான படுத்தினார்கள். அந்த மாணவன் பெற்றோர்களோடு அன்று இரவே  சார் அவர்களின் இல்லம் சென்று வருத்தம் தெரிவித்த போது அவனை அனைத்து மறுநாள் சார் அவர்களே பள்ளிக்கூடம் அழைத்து சென்று தலைமையாசிரியர் முன்னிலையில் பள்ளியில் இணைத்தார்கள். மாணவர்களின் உடல் நிலையிலும் அக்கறை கொண்டவர்கள்.
               பல பள்ளிக்கூடங்களின் விளையாட்டு மைதானத்தை உருவாக்கிய பெருமை சார் அவர்களையே சாரும்.
               சக ஆசிரியர்களோடு இணக்கமாக உறவு முறை சொல்லி பழகும் தன்மை கொண்டவர். விளையாட்டு போட்டியினை ரசித்து நடத்துவார். தற்போது மெட்ரிக்குலேஷன் பள்ளியில் உடற்கல்வி மற்றும் யோக ஆசிரியராகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். தோட்டகலையில் அதிக ஈடுபாடு உள்ளவர்கள். மாணவர்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை கொண்டவர். பல மாணவ, மாணவியர்களுக்கு  தொண்டையில் சதை வளர்ந்து அறுவை சிகிச்சை நிலையிலும் நாட்டு மருந்து மூலம் குணப்படுத்திய பெருமைக்கு சொந்த காரர். தன்னுடைய கல்வி சேவையை 2000 ஆம் ஆண்டு நமது பள்ளியில் நிறைவு செய்தாலும் இன்று வரை அவர்கள் சேவை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார்கள். சார் அவர்களுக்கு மூன்று ஆண்மக்களும் ஒரு பெண் மகளும் உள்ளார்கள்.
                   சார் அவர்களை நாம் முழுமையாக பயன்படுத்தவில்லை. சார் அவர்களை பற்றிய தொகுப்பு நிறைவு பெற வில்லை இன்ஷா அல்லாஹ் தொடரும் ......
                   இன்று போல அவர்கள் என்றும் இருப்பதற்கு நாம் துவா செய்வோம்.

Mohideen Abdul Jabbar

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

மேலப்பாளையத்தின் பெரியவர்



மேலப்பாளையத்தின் பெரியவர்
           
         உடற்பயிற்சி ஆசிரியர் அஹமது மீரான் மைதீன் சார் அவர்களுக்கு பள்ளிகூடத்தில் இரண்டு பெயர்கள் உண்டு.
          ஓன்று பெரியவர் மற்றொன்று பெரிய மீரான் சார்
         பெயரில் மட்டும் பெரியவர் அல்ல நல்ல குணத்திலும் மாணவர்களை நடத்தும் பண்பிலும் சார் அவர்கள் பெரியவரே
         மேலப்பாளையம் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியில் வரலாற்றில் சார் பயிலும் போது தான் சதவீத தேர்ச்சியை ஆரம்பித்து வைத்த பெருமை சார் உடன் பயின்ற மாணவர்களைச் சாரும்.
         அதற்கு முன்பெல்லாம் பத்தாம் வகுப்பில் இருபது மாணவர்கள் பயின்றால் தேர்ச்சி பெறுவது ஐந்து அல்லது ஆறு மாணவர்கள் மட்டுமே
           சார் படிக்கும் போது (1952) படித்த இருபது மாணவர்களில் பதினைந்து மாணவர்கள் தேர்ச்சி பெற்று பள்ளி கூட வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள் ஆவார்கள்.
                            எம்.டி.டி. கல்லூரியில் பயிலும் போது வாலிபாலில் மாவட்ட அளவில் சம்பியன் பட்டம்.
              உடற்கல்வி ஒரு வருடம் படித்த போதும் விளையாட்டில் சார் அவர்களே சாம்பியன்.
            1932 ஆம் ஆண்டு பிறந்தார்கள். தனது கல்விபணியினை 25-06-1956 ஆம் ஆண்டு தான் பயின்ற முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியில் தொடங்கினார்கள்
            முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் பயின்று வெளியே வந்த பழைய மாணவர்களில் சார் அவர்கள் தான் பள்ளியிலே ஆசிரியராக கல்வி பணியை முதன் முதலில் தொடங்கிய முதல்வர் ஆவார்.
              அவரது பணிகாலம் பொற்காலம் என்றே கூறலாம்.
              மாணவர்களை திட்டும் விதமே தனி தான் எப்படி
பாம்பு தின்னி படுவா என எல்லோரையும் அல்ல தப்பு செய்பவர்களை அல்லது தான் செய்து விட்டு அடுத்த மாணவர்கள் மீது பலி போடுபவர்களை
                செல்லமாக மாணவர்களை செல்லகுட்டி எனவும் தெற்கே இருந்து வரும் மாணவர்களை சவுத்பயலே என்றும் அழைப்பது  அவரது பாணி
                பேண்ட் கொஞ்சம் லூசா போட்டு வந்துட்டு சேட்டை செய்தால் மூத்தவா பாவாடை கட்டிட்டு வந்து இருக்கா என கேலி செய்யும் போது அந்த அழகே தனி.
                  சக ஆசிரிய பெருமக்களோடு மாப்பிள்ளை மச்சான் என உறவு கூறி மிகவும் இணக்கத்தோடு பழகுவார்கள். சக ஆசிரிய பெருமக்களுக்கு சிரமம் பிரச்சனைகள் என்றால் அனைத்து ஆசிரியர்களும் சேர்ந்து தோள்கொடுக்கும் தோழனாகவே இருந்து உள்ளார்கள்.
                   1956 ஆம் ஆண்டு முதல் 1985 வரை ஊர்காவல் படையின் சீப் கம்மண்டர் பணி சார் அவர்களுக்கு கீழ் 110 ஊர்காவல் படை காவலர்கள் பணியாற்றினார்கள். அங்கும் பெரியவரே.
                  



                   சார் அவர்களின் பணி பற்றி அப்போதைய கல்வி மாவட்ட அதிகாரி அவர்கள் அந்த வழியே வரும் போதும் செல்லும் போது பள்ளிகூட மைதானத்தில் மாணவர்கள் சாரை சாரையாக விளையாடிகொண்டே இருப்பதை கண்டு ஜீப் டிரைவரிடம் ஜீப்பை நிறுத்த சொல்லி மாணவர்கள் விளையாடும் முறையையும் இரண்டு டிரில் மாஸ்டர்களின் செயல்பாடுகளை கண்டு வியர்ந்து ஒன்றும் அறியாதது போல தலைமையாசிரியர் அறைக்கு சென்ற போது தலைமையாசிரியருக்கும்  அலுவலக உதவியாளர்களுக்கும் ஒரே வித  பரபரப்பு தொற்றி கண்டது எனலாம்  மாவட்ட கல்வி அதிகாரியின் திடீர் வருகையினால்,அதிகாரி அவர்கள் உங்கள் பள்ளிகூட உடற்பயிற்சி ஆசிரியர்களை காண வேண்டும் என வினவிய போது அழைக்கிறோம் என்றார்களாம் இல்லை நானே நேரில் அவர்களை காண வருகிறேன் என கூறி வந்து கை கொடுத்தது மகிழ்ச்சியோடு உங்களை பாராட்டுகிறேன். நான் பார்க்கும் போதெல்லாம் மாணவர்கள் மைதானத்தில் விளையாடி கொண்டே இருக்கிறார்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி உங்களை காண வேண்டும் என ஆவல் ஏற்பட்டு வந்தேன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் என பரிமாறிய போது தான் அனைவருக்குமே மகிழ்ச்சி


                        வகுப்பறையில் வைத்து சிட்டப்ஸ் எடுக்கும் போது சில மாணவர்கள் முடியாமல் நெளியும் போது மூத்தவா பொம்பள மாதிரி நெளிரா மூத்தவா என கேலி செய்யும் போது எல்லோரும் சிரிப்பதும் தனி அழகே
                     இப்படியே சொல்லி கொண்டே போகலாம் சார் அவர்கள் தனது கல்விபணியினை 1990 ல் பணி நிறைவு செய்கிறார்கள். சார் அவர்கள் 1998 தனது ஹஜ் கடமையை தனது துணைவியாரோடு செய்தார்கள். ஹஜ் செய்யும் போது தனிப்பட்ட முறையில் பள்ளிகூட வளர்ச்சிக்கு துவா செய்தார்கள். சார் அவர்களுக்கு மூன்று ஆண்மக்களும் இரண்டு பெண்மக்களும் ஆவர்.
                        சார் அவர்களின் கல்வி சேவையை பாராட்டி சிறந்த கல்வியாளர் காயிதே மில்லத் விருது மேலப்பாளையம் நகர முஸ்லிம் லீக் சார்பாக வழங்கி கவுரவித்தார்கள்  
                        சார் அவர்களை நாம் சந்திக்க சென்ற போது கையில் தஸ்மணியை வைத்து திக்ரு செய்து கொண்டு இருந்தார்கள். சார் அவர்களை நம்மை வரவேற்ற விதம் அன்று சார் மாணவர்களை எப்படி அழைதார்களோ அப்படியே அழைத்தார்கள் அந்த பாணியினை இன்றும் மாற்றம் செய்யவில்லை அதே குசும்புதனமான பேச்சி நம்மை புலரிக்க வைத்தது அவர்களுக்காக துவா செய்து விட்டு பிரிய மனம் இன்றி பிரிந்தோம்
                       சார் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் துவா செய்ய அன்போடு வேண்டுகிறோம்.

Mohideen Abdul Jabbar


           


மதிப்பிற்குரிய தமிழாசிரியர் முகுந்தன் சார் அவர்கள்



தமிழாசிரியர் முகுந்தன் சார் அவர்கள்
        
     தமிழாசிரியர் முகுந்தன் சார் அவர்களின் முரட்டு குரல் மாணவர்கள் மத்தியில் ஒரு வகையான பயத்தை ஏற்படுத்தும்
         சார் அவர்களின் உருவமும் நடந்து வரும் போது பயத்தினை ஏற்படுத்தும்
        சார் அவர்கள் சாதரணமாக நடந்தே வருவார்கள் பள்ளிகூடம் மட்டும் அல்ல கடைவீதிகளுக்கும் வரும்பொழுதும்
         தமிழாசிரியர் என்றாலும் பேன்ட் அணிந்து தான் பள்ளிகூடம் வருவார்கள்.
          மாணவர்களை கருமத்துமாடு என அழைப்பார்கள். அதற்கு காரணம் கேரளா மாநிலத்தின் எல்லை பகுதியான தக்கலையில் பிறந்த காரணத்தால் அங்கு பயன்பாட்டில் உள்ள சொல்லே ஆகும்.
           சார் அவர்கள் 29-05-1948 ஆம் ஆண்டு தக்கலை அருகே கருங்கல் என்ற ஊரில் பிறந்தார்கள்.
           முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியில் கல்விபணியினை 1978 ஆம் ஆண்டு தொடர்ந்தார்கள்.
            சார் அவர்கள் பணியில் சேருவதற்கு அப்போதைய தாளாளர் வழக்குரைஞர் எல்.கே.எம்.அப்துல்ரஹ்மான் அவர்களை சந்தித்த போது அதே பணிக்கு வேறொரு இஸ்லாமிய சகோதரரும் வந்து இருந்தார். ஆனால் தாளாளர் அவர்கள் என்னிடம் பெருந்தன்மையாக இஸ்லாமியரை தேர்வு செய்யாமல் உன்னை ஏன் தேர்வு செய்கிறேன் என்றால் அவருக்கு வேலை கொடுத்தால் என் சமுகத்திற்கு செய்ததாகும். உனக்கு வேலை தந்தால் முழு சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும் நான் உன்னிடம் இதற்கு உரிய பலனை எதிர்பார்கிறேன் உன் பனியின் மூலமாக என சொன்ன அந்த தருணத்தை இன்றும் கண்களில் நீர் கோர்க்க நன்றியுடன் நம்மிடம் பகிர்ந்தார்கள்.
              அதன் பின்பு மாணவர்களை கண்மணி என அழைத்தால் மாணவர்கள் கண்மணிசார் வருகிறார்கள் என அழைக்கப்பட்டார்கள்.
              வகுப்பில் படம் எடுக்கும் போது ஏற்கனவே எடுத்த பட சம்மந்தமாக நிகழ்வுகள் நடந்தால் அதை உடனே மாணவர்களோடு பகிர்ந்து கொள்ளும் பழக்கம் உண்டு.
               சார் அவர்களின் வகுப்பு ஜாலியாகவும் அதே சமயத்தில் பயமாகவும் இருக்கும். ஆங்கில மொழி இணைப்பு மொழி எனவும் உலக மக்களின் தாய்மொழியாகும். ஆகவே மாணவர்கள் அந்த மொழியினை பேசவும் எழுதவும் கற்று கொள்ள வேண்டும் என கூறுவார்கள்.
               தலைமையாசிரியராக (பொறுப்பு) ஒரு வருடம் பணி புரிந்தார்கள்.
               கல்விபணியினை 2006 ஆம் ஆண்டு நிறைவு செய்தாலும் தமிழ் சங்கம் மூலம் தமிழுக்கு மெருகேற்றி வருகிறார்கள்.
               சார் அவர்களின் வீட்டில் புத்தக கண்காட்சி வைக்கும் அளவிற்கு பெரிய நூலகம் உள்ளது. நிறைய புத்தகங்களை படிக்கும் பழக்கம் இப்போதும் உள்ளது.
                சீரபுராணம் கம்பராமாயணம் பற்றி பல மணி நேரம் பேசுவார்கள். சேரமான் பெருமான் வரலாறு பற்றி கூறும் போது சார் அவர்களின் இஸ்லாமிய சிந்தனை அவர்களிடம் பளிச்சிடும்.
                  நேரம் கிடைக்கும் போதெல்லாம் குரானை எடுத்து பார்த்து இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டு இருக்கிறார்கள்.
                        சார் அவர்களுக்கு இரண்டு ஆண்மக்கள் உள்ளார்கள். சார் அவர்களிடம் கற்று கொள்ள நிறைய விசயங்கள் உள்ளது. நீங்கள் எப்ப தேவை என்றாலும் வரலாம் நான் உங்களுக்கு கற்று தர தயாராக உள்ளேன் என கூறி நம்மை நன்கு உபசரித்து நமது வாகனம் வரை வந்து வழியனுப்பி வைத்து நம் மனதை நெகிழ செய்தது.
                         சார் அவர்களின் இன்மை மறுமை வெற்றிக்காக துவா செய்வோம். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

Mohideen Abdul Jabbar