திங்கள், 2 செப்டம்பர், 2013

மனிதநேய பண்பாளர் களக்காடு தமிழாசிரியர் மர்ஹும் காசாமைதீன்

மனிதநேய பண்பாளர் களக்காடு தமிழாசிரியர் மர்ஹும் காசாமைதீன் 




மேலப்பாளையம் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியின் மாணவர்களாலும் சக ஆசிரியர்களாலும் களக்காடு காசா என்றே அழைக்கபடுவார்கள்
அவர் மிக சிறந்த தமிழாசிரியர் கவி நடையில் பேசும் சிறந்த கவிஞர்
மாணவர்களுக்கு பாடங்களை எளிமையான முறையில் எவ்வித ஆரவாரமின்றி அமைதியாக நடத்தும் திறன் கொண்டவர்
வெள்ளை நிற எட்டு முழ வேஷ்டியும் வெளிர்நிற கைககள் மடக்கப்பட்ட சட்டையுடனே காட்சியளிப்பார்கள். அமைதியானவர் சிறந்த பண்பாளர். கோபம் கொள்ளும் நிலையிலும் கூட மாணவர்களை கடும் சொற்கள் கொண்டு சாடமாட்டார்
ஓமநல்லூர் முதல் மேலப்பாளையம் வரை சுமார் ஒன்பது கிலோமீட்டர் வரை சைக்கிளிலே பயணம் செய்து வருவார். தன்னுடைய இரண்டு மகன்களையும் அந்த சைக்கிளிலே அழைத்துக்கொண்டு பள்ளிகூடம் வருவார்
தன்னுடைய கவிதை ஞானத்தை பல மாணவர்களுக்கு கற்று கொடுத்த பிதா மகன்.
மாணவர்களை அன்போடு வாயா போயா எனவும் அடிக்கடி ஏலே கேவ்னிப்பா என அழைப்பது அவர்களின் பாணி. எல்லா தரப்பினராலும் சிறந்த மனிதராகவே கருதபட்டார்
பள்ளிகூடத்தில் மட்டும் அல்லாது அவர் வாழ்ந்த ஊரிலும் சிறந்தவரே
விவசாயம் செய்வதிலும் சிறந்தவர். ஊரிலே விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறையினர் சொல்ல கூடிய விசயங்களை எடுத்து கூறும் விவசாயிகளின் உற்ற தோழனாக 
ஊர்தலைவராக பள்ளிவாசல் நிர்வாகியாக பல ஆண்டுகள் சேவை  புரிந்த நல்லவர்
அந்த ஊரில் அமைதியான சூழ்நிலையில் அழகான பள்ளி வாசல்.. 1917 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளிவாசல். பள்ளிவாசலை சுற்றி ஆலமரங்கள் பள்ளிவாசலின் பின்புறம் அமைதியான குளம் என மனதிற்கு அமைதியை தரக்கூடிய சூழல்
கிட்ட தட்ட இரண்டு குடும்பத்தை சார்ந்தவர்களே   முப்பத்திரெண்டு வீடுகளில் வாழ்கிறார்கள்
முஸ்லிம்கள் மட்டும் அல்லாது பிற பல்வேறு சமய மக்கள் வாழ்கிறார்கள் அவர்களிடையே உள்ள இணக்கமான உறவை காணும் போது இன்பமாகவே இருக்கிறது. இது போன்ற ஒற்றுமையான உறவு உலகெங்கும் இருக்க கூடாதா என்ற எண்ணம் தோன்றியது
பள்ளிவாசல் அருகே அரைகுறையாக கட்டபட்ட மதரஸா கட்டிடம் காட்சியளித்தது மனதிற்கு வேதனையே தருகிறது அந்த மதரசா கட்டிடம் சிறப்பாக அமைவதற்கும் அந்த ஊர் மக்களுக்கும் நாம் துவா செய்வோம்.
களக்காடு காசா சார் அவர்களுக்கு நான்கு பெண்மக்கள் ஐந்து ஆண்மக்கள் ஆவர். சார் அவர்களின் துணைவியார் பெயர் பாத்திமா பீவி ஆகும். மக்களுக்கு சம்மந்தம் ஊருக்குள்ளேயே செய்து இருக்கிறார்கள் .அனைவரும் நலமாக இருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்
சார் அவர்கள் நம்மிடையே ஹயாதாக இல்லாவிட்டாலும் அவர் வாழ்ந்த வீடு அந்த பகுதிகளை காணும் போது மிகவும் ஆனந்தமாகவே உள்ளது. அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பிழைகளை வல்ல ரஹ்மான் பொறுத்தருள வேண்டியும் அவர்களின்  மக்பிரத்திற்காகவும் 


நாம் அனைவரும் துவா செய்வோம்   

Mohideen Abdul Jabbar


1 கருத்து:

  1. எனது தமிழ் ஆசான் "களந்தைத் தமிழ்க் கோ "புலவர் சி.காசா மைதீன்.....உன் பதிவைப் பார்த்து கண்களில் கண்ணீர் திரையிட்டது.....அவரை நம் பள்ளிக்கு வரும் முன்னரே அறிவேன்....
    எங்கள் மாமா வழக்குரைஞர்.எல்.கே.எம் .அப்துர் ரகுமான் சாகிப் அவர்கள் முஸ்லிம் மேனிலைப் பள்ளி தாளாளராக இருந்த போது 1976-77 ஆண்டில் அவர்களை தமிழாசிரியராக பள்ளியில் நியமித்தார்கள்...பல முறை அவர்கள் எங்க மாமா வீடு வரும் போதெல்லாம் அவரை உட்காரவைத்து தேநீர் கொடுத்து உபசரிக்கும் பணி என்னுடையது....என் மீது ,என்னைப் பார்த்த நாள் முதல் அவருக்கு பாசம்...அதிகம் உண்டு.....அவர் முதல் நாள் பணிக்கு வரும்போதும் நான் தான் அவருக்கு தேநீர் தந்து அனுப்பி வைத்து விட்டு அவர் பின்னாலேயே வகுப்புக்கு வந்தேன்....முதல் வகுப்பே எங்களுக்கு தான் அமைந்திருந்தது..எனக்கு எட்டு,ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு தமிழாசிரியராக இருந்து தமிழ் கற்பித்தார்....அவரைப் பற்றி இன்னும் நிறைய நான் எழுத வேண்டும்....நான் தேர்தலில் நின்றபோது "ஏணியை"
    தூக்கிக் கொண்டு வாக்குக் கேட்டவர்.....
    பேர்றிஞர் அண்ணா,காயிதே மில்லத்,கலைஞர் கருணாநிதி,நாவலர் நெடுஞ்செழியன்,நாவுக்கரசர் நாஞ்சில் மனோகரன்,முதலான திராவிடர் இயக்கத் தலைவர்களுடன், மொழிப் போராட்டத் தளபதிகளுடன் தொடர்பு கொண்டவர்..அவர்களைப் பற்றி அடிக்கடி சொல்லி எங்களுக்கும் அவர்கள் மீது அன்பு,பிரியோம் வரச் செய்ய்தவர்...அவர் புகழ் வாழ்க....

    பதிலளிநீக்கு