மேலப்பாளையத்தின் பெரியவர்
உடற்பயிற்சி ஆசிரியர் அஹமது மீரான் மைதீன்
சார் அவர்களுக்கு பள்ளிகூடத்தில் இரண்டு பெயர்கள் உண்டு.
பெயரில்
மட்டும் பெரியவர் அல்ல நல்ல குணத்திலும் மாணவர்களை நடத்தும் பண்பிலும் சார்
அவர்கள் பெரியவரே
மேலப்பாளையம்
முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியில் வரலாற்றில் சார் பயிலும் போது தான் சதவீத
தேர்ச்சியை ஆரம்பித்து வைத்த பெருமை சார் உடன் பயின்ற மாணவர்களைச் சாரும்.
அதற்கு முன்பெல்லாம்
பத்தாம் வகுப்பில் இருபது மாணவர்கள் பயின்றால் தேர்ச்சி பெறுவது ஐந்து அல்லது ஆறு
மாணவர்கள் மட்டுமே
சார்
படிக்கும் போது (1952) படித்த இருபது மாணவர்களில் பதினைந்து மாணவர்கள் தேர்ச்சி
பெற்று பள்ளி கூட வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள் ஆவார்கள்.
எம்.டி.டி.
கல்லூரியில் பயிலும் போது வாலிபாலில் மாவட்ட அளவில் சம்பியன் பட்டம்.
உடற்கல்வி ஒரு வருடம் படித்த போதும் விளையாட்டில் சார் அவர்களே சாம்பியன்.
1932 ஆம் ஆண்டு பிறந்தார்கள். தனது கல்விபணியினை 25-06-1956 ஆம் ஆண்டு தான் பயின்ற முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியில்
தொடங்கினார்கள்
முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் பயின்று வெளியே வந்த பழைய மாணவர்களில் சார்
அவர்கள் தான் பள்ளியிலே ஆசிரியராக கல்வி பணியை முதன் முதலில் தொடங்கிய முதல்வர்
ஆவார்.
அவரது
பணிகாலம் பொற்காலம் என்றே கூறலாம்.
மாணவர்களை திட்டும் விதமே தனி தான் எப்படி
பாம்பு தின்னி படுவா என எல்லோரையும் அல்ல தப்பு செய்பவர்களை
அல்லது தான் செய்து விட்டு அடுத்த மாணவர்கள் மீது பலி போடுபவர்களை
செல்லமாக மாணவர்களை செல்லகுட்டி எனவும் தெற்கே இருந்து வரும் மாணவர்களை
சவுத்பயலே என்றும் அழைப்பது அவரது பாணி
பேண்ட் கொஞ்சம் லூசா போட்டு வந்துட்டு சேட்டை செய்தால் மூத்தவா பாவாடை
கட்டிட்டு வந்து இருக்கா என கேலி செய்யும் போது அந்த அழகே தனி.
சக ஆசிரிய பெருமக்களோடு மாப்பிள்ளை மச்சான் என உறவு கூறி மிகவும்
இணக்கத்தோடு பழகுவார்கள். சக ஆசிரிய பெருமக்களுக்கு சிரமம் பிரச்சனைகள் என்றால்
அனைத்து ஆசிரியர்களும் சேர்ந்து தோள்கொடுக்கும் தோழனாகவே இருந்து உள்ளார்கள்.
1956 ஆம் ஆண்டு முதல் 1985 வரை ஊர்காவல் படையின்
சீப் கம்மண்டர் பணி சார் அவர்களுக்கு கீழ் 110 ஊர்காவல் படை காவலர்கள் பணியாற்றினார்கள்.
அங்கும் பெரியவரே.


சார் அவர்களின் பணி பற்றி அப்போதைய கல்வி மாவட்ட அதிகாரி அவர்கள் அந்த
வழியே வரும் போதும் செல்லும் போது பள்ளிகூட மைதானத்தில் மாணவர்கள் சாரை சாரையாக
விளையாடிகொண்டே இருப்பதை கண்டு ஜீப் டிரைவரிடம் ஜீப்பை நிறுத்த சொல்லி மாணவர்கள்
விளையாடும் முறையையும் இரண்டு டிரில் மாஸ்டர்களின் செயல்பாடுகளை கண்டு வியர்ந்து
ஒன்றும் அறியாதது போல தலைமையாசிரியர் அறைக்கு சென்ற போது தலைமையாசிரியருக்கும் அலுவலக
உதவியாளர்களுக்கும் ஒரே வித பரபரப்பு தொற்றி கண்டது எனலாம் மாவட்ட கல்வி அதிகாரியின் திடீர் வருகையினால்,அதிகாரி
அவர்கள் உங்கள் பள்ளிகூட உடற்பயிற்சி ஆசிரியர்களை காண வேண்டும் என வினவிய போது
அழைக்கிறோம் என்றார்களாம் இல்லை நானே நேரில் அவர்களை காண வருகிறேன் என கூறி வந்து கை
கொடுத்தது மகிழ்ச்சியோடு உங்களை பாராட்டுகிறேன். நான் பார்க்கும் போதெல்லாம் மாணவர்கள்
மைதானத்தில் விளையாடி கொண்டே இருக்கிறார்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி உங்களை காண
வேண்டும் என ஆவல் ஏற்பட்டு வந்தேன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் என பரிமாறிய
போது தான் அனைவருக்குமே மகிழ்ச்சி
வகுப்பறையில் வைத்து சிட்டப்ஸ் எடுக்கும் போது சில மாணவர்கள் முடியாமல்
நெளியும் போது மூத்தவா பொம்பள மாதிரி நெளிரா மூத்தவா என கேலி செய்யும் போது எல்லோரும்
சிரிப்பதும் தனி அழகே
இப்படியே சொல்லி கொண்டே போகலாம் சார் அவர்கள் தனது கல்விபணியினை 1990 ல் பணி நிறைவு
செய்கிறார்கள். சார் அவர்கள் 1998
தனது ஹஜ் கடமையை தனது துணைவியாரோடு செய்தார்கள்.
ஹஜ் செய்யும் போது தனிப்பட்ட முறையில் பள்ளிகூட வளர்ச்சிக்கு துவா செய்தார்கள்.
சார் அவர்களுக்கு மூன்று ஆண்மக்களும் இரண்டு பெண்மக்களும் ஆவர்.
சார் அவர்களின் கல்வி சேவையை பாராட்டி சிறந்த கல்வியாளர் காயிதே மில்லத்
விருது மேலப்பாளையம் நகர முஸ்லிம் லீக் சார்பாக வழங்கி கவுரவித்தார்கள்
சார் அவர்களை நாம் சந்திக்க சென்ற போது கையில் தஸ்மணியை வைத்து திக்ரு
செய்து கொண்டு இருந்தார்கள். சார் அவர்களை நம்மை வரவேற்ற விதம் அன்று சார்
மாணவர்களை எப்படி அழைதார்களோ அப்படியே அழைத்தார்கள் அந்த பாணியினை இன்றும் மாற்றம்
செய்யவில்லை அதே குசும்புதனமான பேச்சி நம்மை புலரிக்க வைத்தது அவர்களுக்காக துவா
செய்து விட்டு பிரிய மனம் இன்றி பிரிந்தோம்
சார் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் துவா செய்ய
அன்போடு வேண்டுகிறோம்.
Mohideen Abdul Jabbar

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக