வெள்ளி, 13 செப்டம்பர், 2013

மதிப்பிற்குரிய தமிழாசிரியர் முகுந்தன் சார் அவர்கள்



தமிழாசிரியர் முகுந்தன் சார் அவர்கள்
        
     தமிழாசிரியர் முகுந்தன் சார் அவர்களின் முரட்டு குரல் மாணவர்கள் மத்தியில் ஒரு வகையான பயத்தை ஏற்படுத்தும்
         சார் அவர்களின் உருவமும் நடந்து வரும் போது பயத்தினை ஏற்படுத்தும்
        சார் அவர்கள் சாதரணமாக நடந்தே வருவார்கள் பள்ளிகூடம் மட்டும் அல்ல கடைவீதிகளுக்கும் வரும்பொழுதும்
         தமிழாசிரியர் என்றாலும் பேன்ட் அணிந்து தான் பள்ளிகூடம் வருவார்கள்.
          மாணவர்களை கருமத்துமாடு என அழைப்பார்கள். அதற்கு காரணம் கேரளா மாநிலத்தின் எல்லை பகுதியான தக்கலையில் பிறந்த காரணத்தால் அங்கு பயன்பாட்டில் உள்ள சொல்லே ஆகும்.
           சார் அவர்கள் 29-05-1948 ஆம் ஆண்டு தக்கலை அருகே கருங்கல் என்ற ஊரில் பிறந்தார்கள்.
           முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியில் கல்விபணியினை 1978 ஆம் ஆண்டு தொடர்ந்தார்கள்.
            சார் அவர்கள் பணியில் சேருவதற்கு அப்போதைய தாளாளர் வழக்குரைஞர் எல்.கே.எம்.அப்துல்ரஹ்மான் அவர்களை சந்தித்த போது அதே பணிக்கு வேறொரு இஸ்லாமிய சகோதரரும் வந்து இருந்தார். ஆனால் தாளாளர் அவர்கள் என்னிடம் பெருந்தன்மையாக இஸ்லாமியரை தேர்வு செய்யாமல் உன்னை ஏன் தேர்வு செய்கிறேன் என்றால் அவருக்கு வேலை கொடுத்தால் என் சமுகத்திற்கு செய்ததாகும். உனக்கு வேலை தந்தால் முழு சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும் நான் உன்னிடம் இதற்கு உரிய பலனை எதிர்பார்கிறேன் உன் பனியின் மூலமாக என சொன்ன அந்த தருணத்தை இன்றும் கண்களில் நீர் கோர்க்க நன்றியுடன் நம்மிடம் பகிர்ந்தார்கள்.
              அதன் பின்பு மாணவர்களை கண்மணி என அழைத்தால் மாணவர்கள் கண்மணிசார் வருகிறார்கள் என அழைக்கப்பட்டார்கள்.
              வகுப்பில் படம் எடுக்கும் போது ஏற்கனவே எடுத்த பட சம்மந்தமாக நிகழ்வுகள் நடந்தால் அதை உடனே மாணவர்களோடு பகிர்ந்து கொள்ளும் பழக்கம் உண்டு.
               சார் அவர்களின் வகுப்பு ஜாலியாகவும் அதே சமயத்தில் பயமாகவும் இருக்கும். ஆங்கில மொழி இணைப்பு மொழி எனவும் உலக மக்களின் தாய்மொழியாகும். ஆகவே மாணவர்கள் அந்த மொழியினை பேசவும் எழுதவும் கற்று கொள்ள வேண்டும் என கூறுவார்கள்.
               தலைமையாசிரியராக (பொறுப்பு) ஒரு வருடம் பணி புரிந்தார்கள்.
               கல்விபணியினை 2006 ஆம் ஆண்டு நிறைவு செய்தாலும் தமிழ் சங்கம் மூலம் தமிழுக்கு மெருகேற்றி வருகிறார்கள்.
               சார் அவர்களின் வீட்டில் புத்தக கண்காட்சி வைக்கும் அளவிற்கு பெரிய நூலகம் உள்ளது. நிறைய புத்தகங்களை படிக்கும் பழக்கம் இப்போதும் உள்ளது.
                சீரபுராணம் கம்பராமாயணம் பற்றி பல மணி நேரம் பேசுவார்கள். சேரமான் பெருமான் வரலாறு பற்றி கூறும் போது சார் அவர்களின் இஸ்லாமிய சிந்தனை அவர்களிடம் பளிச்சிடும்.
                  நேரம் கிடைக்கும் போதெல்லாம் குரானை எடுத்து பார்த்து இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டு இருக்கிறார்கள்.
                        சார் அவர்களுக்கு இரண்டு ஆண்மக்கள் உள்ளார்கள். சார் அவர்களிடம் கற்று கொள்ள நிறைய விசயங்கள் உள்ளது. நீங்கள் எப்ப தேவை என்றாலும் வரலாம் நான் உங்களுக்கு கற்று தர தயாராக உள்ளேன் என கூறி நம்மை நன்கு உபசரித்து நமது வாகனம் வரை வந்து வழியனுப்பி வைத்து நம் மனதை நெகிழ செய்தது.
                         சார் அவர்களின் இன்மை மறுமை வெற்றிக்காக துவா செய்வோம். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

Mohideen Abdul Jabbar
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக