71 யிலும் 17
SEVENTY
ONE யிலும் SEVENTEEN
சின்னவர் என சக ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் அன்போடு அழைக்கபடுபவர்கள் யூசுப் சார் அவர்கள்.
சிம்மக்குரலுக்கு சொந்தக்காரர்.
சார் அவர்களின் பணிக் காலத்தில் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாவட்ட அளவில் பல
பள்ளிக்கூடங்களில் நடந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்று அதிக அதிகமான கோப்பைகளை
வென்று சாதனை புரிந்துள்ளது.
மாணவர்களை கோசப்பயலே என
கம்பீரத்துடன் கர்ஜிப்பார். அந்த கர்ஜனை இன்றும் நம் காதுகளில் ஒலித்துகொண்டே
இருக்கிறது. அவர் பல சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கியவர்.
சார் அவர்கள் தனது கல்வி பணியினை 1962 ஆம் ஆண்டு
விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள தூய மேரிஸ் பள்ளிகூடத்தில் ஆரம்பித்து 1963 ஆம் ஆண்டு மேலப்பாளையம்
முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியில் சேர்ந்து முப்பத்தாறு ஆண்டுகாலங்கள் தனது
கல்விபணியினை மிகச்சிறப்புடன் ஆற்றி உள்ளார்கள். அதோடு நின்று விடாமல் இன்று வரை
அந்த பணி மூன்றாவது தலைமுறையையும் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. முஸ்லிம் மேல்
நிலைப் பள்ளியில் முப்பத்தாறு ஆண்டு காலம் பணியாற்றிய பெருமை சின்னவரையே சாரும்.
சார் அவர்கள் உடற்பயிற்சி பெற்ற
விதமே தனி தான் சார் அவர்களை உருவாக்கிய ஆசிரியபெருமக்கள் அப்துல்காதர்,
வெங்கடேஷன் ஆவார்கள். பள்ளி பருவத்திலே சாப்ட் பால் மற்றும் பேஸ்கட் பாலில் கிங்
.இன்றும் மாவட்ட அளவில் சாப்ட்பாலில் சார் அவர்களே கிங். நடுவராக மாவட்ட அளவில்
சிறப்பாக பணிபுரிந்து பல பள்ளிகூட ஆசிரிய பெருமக்களின் பாராட்டை பெற்ற பிதாமகன்.
சார் அவர்கள் மைதானத்திற்கு
சாட்ஸ்,டிசர்ட் அணிந்து தலையிலே தொப்பியும்,கழுத்தில் விசில் தொங்க விட்டு வரும்
அழகே தனி. மைதானத்தில் வந்து விட்டால் மாணவர்கள் போலவே காட்சியளிப்பார். சார்
அவர்கள் மார்ச் பாஸ்ட் சொல்லி கொடுக்கும் ஸ்டைலை
பார்த்து விட்டு விளையாட்டுதினத்திற்கு வருகை தரும் முக்கியக்கியஸ்தர்கள் அனைவருமே
சார் அவர்களின் ரசிகராகவே மாறிய சம்பவங்கள் பல உண்டு.
சார் அவர்களின் பணிகாலம்
பள்ளிக்கூட விளையாட்டுத் துறையின்
பொற்காலமே.
கோபம் இருக்கும் இடத்தில் நல்ல குணம்
இருக்கும் என்பார்களே அதை சார் அவர்களிடம் காணலாம்
மாணவர்களை உரிமையோடு கண்டிக்கும்
வேளையில் உரிமையோடு அரவணைக்கும் குணமும்
இருப்பது சார் அவர்களுக்குரிய தனி சிறப்பாகும்.
ஒரு முறை பிரையர் செய்வதற்கு ஆள்
பற்றாக்குறை ஆனதால் ஒரு மாணவனை சார் அவர்கள் பிரையர் செய்ய அழைத்த போது அந்த
மாணவன் என்ன நினைத்தானோ தனது பேனாவில் உள்ள நிப்பால் சார் அவர்களை குத்தி விட்டான்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியிலே
ஒரு வகை பதட்டம். சார் அவர்கள் அவருக்கே உரிய பாணியில் ஒன்றும் இல்லை என கூறி அந்த
மாணவனை தேடினார்கள் அந்த மாணவனோ அங்கு இல்லாமல் பயந்து ஓடிவிட்டான். சக
ஆசிரியர்கள் அனைவருமே அந்த மாணவன் மீது கோபத்தில் இருந்த போது சார் அவர்கள் எல்லா
ஆசிரியர்களையும் சமாதான படுத்தினார்கள். அந்த மாணவன் பெற்றோர்களோடு அன்று
இரவே சார் அவர்களின் இல்லம் சென்று
வருத்தம் தெரிவித்த போது அவனை அனைத்து மறுநாள் சார் அவர்களே பள்ளிக்கூடம் அழைத்து
சென்று தலைமையாசிரியர் முன்னிலையில் பள்ளியில் இணைத்தார்கள். மாணவர்களின் உடல்
நிலையிலும் அக்கறை கொண்டவர்கள்.
பல பள்ளிக்கூடங்களின் விளையாட்டு
மைதானத்தை உருவாக்கிய பெருமை சார் அவர்களையே சாரும்.
சக ஆசிரியர்களோடு இணக்கமாக உறவு
முறை சொல்லி பழகும் தன்மை கொண்டவர். விளையாட்டு போட்டியினை ரசித்து நடத்துவார்.
தற்போது மெட்ரிக்குலேஷன் பள்ளியில் உடற்கல்வி மற்றும் யோக ஆசிரியராகவும் சிறப்பாக
பணியாற்றி வருகிறார்கள். தோட்டகலையில் அதிக ஈடுபாடு உள்ளவர்கள். மாணவர்களின் ஆரோக்கியத்திலும்
அக்கறை கொண்டவர். பல மாணவ, மாணவியர்களுக்கு தொண்டையில் சதை வளர்ந்து அறுவை சிகிச்சை நிலையிலும்
நாட்டு மருந்து மூலம் குணப்படுத்திய பெருமைக்கு சொந்த காரர். தன்னுடைய கல்வி
சேவையை 2000 ஆம் ஆண்டு
நமது பள்ளியில் நிறைவு செய்தாலும் இன்று வரை அவர்கள் சேவை தொடர்ந்து செய்து கொண்டு
இருக்கிறார்கள். சார் அவர்களுக்கு மூன்று ஆண்மக்களும் ஒரு பெண் மகளும் உள்ளார்கள்.
சார்
அவர்களை நாம் முழுமையாக பயன்படுத்தவில்லை. சார் அவர்களை பற்றிய தொகுப்பு நிறைவு
பெற வில்லை இன்ஷா அல்லாஹ் தொடரும் ......
இன்று போல அவர்கள் என்றும்
இருப்பதற்கு நாம் துவா செய்வோம்.
Mohideen Abdul Jabbar

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக