செவ்வாய், 15 அக்டோபர், 2013

மர்ஹூம் வரலாற்றாசிரியர் அலிமித்தீன் ஷாகுல் ஹமீது அவர்கள்



மர்ஹூம் வரலாற்றாசிரியர் அலிமித்தீன் ஷாகுல் ஹமீது அவர்கள் 

அனைவருக்கும் எங்களது தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்             

                       முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியின் ஆசிரியர்களில் தனி முத்திரை பதித்தவர் உதவி தலைமையாசியர் மர்ஹூம் அலிமித்தீன் ஷாகுல் ஹமீது அவர்கள். வகுப்பறையில் பயன்படுத்தும் பாடி லேங்க்வேஜ் நமதூரில் பயன்படுத்தும் சொற்களை எதார்த்தமாக அவர்கள் பேசும் பேச்சினை இன்று நினைத்தாலும் நமக்கு சிரிப்பு வந்துவிடும்.
                     21-05-1942 ஆம் ஆண்டு பிறந்தார். முதன் முதலில் கல்வி பணியினை எட்டு மாதகாலங்கள் சென்னை ஜமாலியா மேல் நிலைப்பள்ளியில் ஆரம்பித்து 17-11-1967 ஆம் ஆண்டு மேலப்பாளையம் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியில் கல்வி பணியினை தொடந்தார்.
                   ஆங்கிலம், வரலாறு, புவியியல் பாடம் அழகாகவும் மிகவும் தத்ருபமாக எடுப்பார்கள். சார் அவர்களின் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்றார்போல மிக ஜாலியாகவே நடைபெறும். வகுப்பறையில் சிரிப்பிற்கு பஞ்சமே இருக்காது.
                      எந்த அளவிற்கு ஜாலியாக இருப்பார்களோ அந்த அளவிற்கு கோபமும் வரும். சார் அவர்கள் கோபம் வந்து அடிக்க ஆரம்பித்தால் மாணவர்கள் மிரண்டு போகும் அளவிற்கு  அடியும் விழும்.
                       சார் அவர்கள் வராண்டாவில் நடந்து வரும் அழகே தனி தான். ஒரு  கையில் புஸ்தகங்களோடும் ஒரு கையில் சிறிய சாட்டை கம்பு கொண்டு வருவார்கள். மாணவர்கள் ஆங்கிலத்தில் பிழையில்லாமல் எழுத அதிக மாக டிகேடேசன் செய்து எழுத்து பயிற்சி கொடுப்பதில் அதிக கவனம் எடுப்பார்கள். அதே போல வரலாறு,புவியியல் பாடங்கள் எடுக்கும் போதும் தமிழில் இலக்கண பிழையில்லாமல் எழுத தமிழ் வார்த்தைகளை டிகேடேட் செய்யும் முறைக்கு சார் அவர்களின் மாணவர்கள் மீது உள்ள தனது ஆர்வத்தின் வெளிப்பாடே எனலாம்.
                       பாடம் நடத்தும் போது வகுப்பறையில் இரண்டு கைகளிலும் குச்சியை (சாட்டைகம்பு) வைத்தது அசைத்து அசைத்து பேசும் விதம் இன்றும் நம் கண் முன்னே தோன்றுகிறது. ஆங்கிலத்தில் ஒவ்வொரு எஸ்ஸை நடத்தி முடிந்த உடன் வகுப்பில் மறுநாள் டெஸ்ட் வைப்பது அதே போல வரலாற்று பாடங்கள் முடிந்த உடன் டெஸ்ட் வைத்து மாணவர்களை தேர்விற்கு தயார் படுத்து வதில் அதிக கவனம் எடுத்து செயல்படுபவர். அமைதியாக பாடம் நடந்து கொண்டு இருக்கும் போது இடையூராக ஒரு சில மாணவர்கள் கோரசாக சார் சொல்லுவதியே திரும்ப சொல்லும்போது ஏவம்லே ஏறும மாடு மாடு மாடு என சொல்லும் அழகு இன்று நினைத்தாலும் நம்மை அறியாமல் சிரிப்பு வருவதை நம்மால் கட்டுபடுத்த முடிவதில்லை.
                   காலாண்டு அரையாண்டு தேர்வுகளில் சார் அவர்கள் ஏய் இந்த எஸ்ஸை வரும் ஆகவே மானபாடம் செய்து கொள்ளுங்கள் என கூறுவார். தேர்வுவின் போது அந்த எஸ்ஸை வராத போது மாணவர்கள் வகுப்பறையில் சார் நீங்கள் சொன்ன எஸ்ஸை வரவில்லையே என கேட்கும் போது ஆமலே செத்தவனே சொன்னேன் வரல சாவா சொல்றே என சொல்லும் போது அவரது உடல் ஸ்டைலை நினைத்தால் அதை சொல்ல இயலாது அனுபவித்து பார்க்கவே வேண்டும் அற்புதமாக இருக்கும். சார் அவர்கள் பள்ளிகூடம் முடிந்து வகுப்பில் டியூசன் எடுப்பார்கள் அதற்க்கு ஒரு மாணவனிடம் இரண்டு ருபாய் பீஸ் வாங்கு வார்கள். எளியபட்ட மாணவர்களிடம் எந்த கட்டணமும் வாங்காமல் சொல்லி கொடுப்பது, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு பல ஆண்டு வினாத் தாளை சேகரித்து மாணவர்களுக்கு கொடுப்பது, நல்ல மாணவர்களை ஊக்குவிப்பதும், சேட்டை செய்யும் மாணவர்களை அழைத்து இதுவரை நீ படிக்கல அது  ஒழிஞ்சி போதுலே ஏல ஒருமாசைக்கி படிலே என கெஞ்சும் தன்மை சார் அவர்களின் சிறந்த குணமே என்றால் அது மிகையாகாது.
                காலாண்டு அரையாண்டு தேர்வு எழுதும் போது தேர்வு ஹாலில் மாணவர்கள் தேர்வு எழுத தேவைப்படும் கூடுதல் பேப்பர் வாங்க அவர்கள் இடத்தில் எழுந்து நின்று கேட்க வேண்டும் அப்படி கேட்கும் போது தமாசாக மூத்தவா கிழிக்கிற கிலிக்கு கொண்டுவந்து கொடுக்கனும் வாலா என சொல்லுவதும் சார் அவர்களின் தனி ஸ்டைலே ஆகும்.  1997 ஆம் ஆண்டு தனது ஹஜ் கடமையை பூர்த்தி செய்தார். சார் அவர்கள் தந்து கல்வி சேவையை 31-05-2000 ஆம் ஆண்டு நிறைவு செய்கிறார்கள். சுமார் முப்பத்திரண்டு ஆண்டு ஆறு மாதம் சார் அவர்களின் கல்வி சேவை மனதில் தனியிடம் பெற்றதே ஆகும். வல்ல ரஹ்மான் அன்னாரின் பிழை பொறுத்து மறுமை வாழ்க்கையை பிரகாசமாக்கி வைப்பானாக ஆமீன்

Mohideen Abdul Jabbar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக