மாசிலாமணி சார் அவர்கள்
மேலப்பாளையம் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியின் ஓய்வு பெற்ற வரலாற்று ஆசிரியர்
அய்யா மாசிலாமணி அவர்கள் பெயரில் மட்டும் அல்ல நல்ல குணத்திலும் மாசில்லா மணியே
ஆவார்
1928 ஆம் ஆண்டு பிறந்தார்கள்
சார்
அவர்கள் தனது கல்வி பணியை எட்டாயபுரத்தில் இரண்டு ஆண்டுகள் செய்து விட்டே முஸ்லிம்
மேல் நிலைப்பள்ளியில் பணியாற்ற 1951 ஆம் ஆண்டு சேருகிறார்கள்.
அய்யா
அவர்கள் எட்டு முழ வேஷ்டியில் அரைக்கை சட்டை அணிந்து குலவணிகர்புரத்திலிருந்து
சைக்கிளில் தான் வருவார்கள்.
சார்
அவர்களின் கம்பீர நடை அழகே தனி
வரலாறு புவியியல் ஆங்கிலம் போன்ற படங்களை
அவர்களுக்கே உரிய பாணியிலே கம்பீரமாக நடத்துவார்கள்.
உலக
வரைபடத்தை கரும்பலகையில் வரையும் அழகே தனி தான்.
வகுப்பறையில் கரும்பலகையில் உலக
வரைபடத்தை தத்துருபமாக வரையும் அழகே தனி சாகபீஸை எடுப்பது
தான் தெரியும் உலக வரைபடம் அடுத்த
நொடியில் கரும்பலகையில் அற்புதமாக இருக்கும் அந்த அளவிற்கு வேகமாக வரைவார்கள்.
பெரும்பாலும் சார் வகுப்பில் முதல் இரண்டு வரிசை மட்டுமே இருக்க வேண்டும் மற்றவர்கள்
கீழே சார் அவர்களை சுற்றி அமர்ந்து இருக்க சொல்வார்கள்.
மதிய உணவு முடிந்து ஆரம்பம் ஆகும் வகுப்பில் சாப்பிட்ட களைப்பில் சிலுசிலு
வென காற்றில் சார் அவர்கள் சொல்லும் வரலாற்று சம்பவங்கள் மாணவர்களை சொக்க
வைக்கும். மாணவர்கள் ஒரு சிலருக்கு தூக்கம் தன்னை மிஞ்சி வரும்போது மற்றவர்கள்
சார் அவர்களின் கவனத்திற்கு கொண்டு
செல்வார்கள்.
சார் தூங்கும் மாணவனை பார்த்து அய்யா அவனை ஆசீர்வாதம் செய்ங்கைய்யா என கூறி
முடிப்பதற்குள் தலையில் குட்டு விழும் எல்லா மாணவர்களும் ஒருவனை சேர்ந்து மொத்தி
விடுவதால் தூக்கம் வந்தாலும் தூங்குவதில்லை. பலர் தூங்குவதை கட்டு படுத்தும் பாடு
இன்று நினைத்தாலும் சிரிப்பு வருது. பெரும்பாலும் ஆசீர்வாதம் எல்லா மாணவர்களும்
வாங்கி இருப்பார்கள்.
சார் அவர்கள் மாணவர்களை பார்த்து
அடிக்கடி அல்லாஈகான் போலே என்பார்கள். மாணவர்களுக்கு பணத்தின் முக்கியத்துவதை
அடிக்கடி அறிவுரை சொல்லுவார்கள். விட்டமின் பா இருந்தால் தான் மனிதனுக்கு மரியாதை என
சொல்லி சம்பாத்தியத்தின் அவசியத்தை உணர்த்திய பிதாமகன்
சார் அவர்கள் 1986 ஆம் ஆண்டு தனது கல்வி பணியினை நிறைவு செய்கிறார்கள். சார்
அவர்களை காண நாம் சென்ற போது அவர்களும்,துணைவியாரும் அன்போடு வரவேற்றார்கள்.
சக ஆசிரிய பெருமக்களின் பெயர்களை சொல்லி
தனித்தனியே நலம் விசாரித்தார்கள். சக ஆசிரிய பெருமக்கள் தன்னோடு பாகுபாடின்றி பழகிய விதத்தை நம் கண் முன்னே
கொண்டு வந்து மனம் மகிழ்ந்தார்கள். மறைந்த
ஆசிரிய பெருமகனார் ஹபீப் சார் அவர்கள் இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னாள் சார்
அவர்களை சந்தித்து உடல் நலம் விசரித்தை சொல்லி கண் கலங்கிய அய்யா அவர்கள் சார்
மறைந்த செய்தி கேட்டு அன்று முழுவதும் சாப்பிடாமல் இருந்ததை அவர்களின் துணைவியார்
நினைவு கூர்ந்தார்கள்.
சார் அவர்களின் கம்பீரம் சற்று தளர்ந்தே காணபட்டது நமக்கு மிகுந்த வேதனையாக
இருந்தது. நாம் விடை பெற்று வரும்போது எங்கள் கையை பிடித்து முத்த மிட்டு
வாழ்த்திய நிகழ்வு நம்மை கண்கலங்க செய்தது. கனத்த இதயத்தோடு வெளியேறினோம். சக்கரை
வியதினால் கால்களில் சில விரல்கள் எடுக்க பட்டு வீட்டில் மட்டுமே நடமாட்டம் வெளியே
செல்லும்போது ஆட்டோவில் மட்டுமே செல்வார்கள்.
சார் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் மறுமை வாழ்விற்கும் துவா செய்ய
வேண்டுகிறோம்
Mohideen Abdul Jabbar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக