வியாழன், 26 ஜூலை, 2012

மேலப்பாளையமும் தக்கடியும்

          மேலப்பாளையத்தில் நோன்பு வந்துவிட்டால் சமையல்கலை வித்தகர்களுக்கு ஏகப்பட்ட கிராக்கிகள் காரணம் ஒருபுறம் அனைத்துபள்ளிவசல்களுக்கும் நோன்புக்கஞ்சிகாயிச்சும் பணி காலை ஒன்பதுமணிமுதல் பதினொன்று அல்லது பன்னிரண்டுமணி வரை ஆகிவிடும் அதன் பிறகு நோன்பு திறக்க நாஷ்ட வேலை ஊரில் கல்யாணம் முடிந்து மூன்று ஆண்டுகள் வரை நோன்பு சீர்கொடுக்கும் பழக்கம் இன்று வரை இருந்து கொண்டுதான் வருகிறது ஊரில் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் சில பழக்கவழக்கங்கள் தொன்றுதொட்டு நடந்துதான் வருகிறது.
         சம்பந்தம் பேசிபோட்டுஇருந்தால் அந்த வருடம் நோன்புசீர் ஓட்டுமாவும் நெய்யும் கல்யாணம் ஆனா முதல் வருடம் என்றால் நோன்பு சீராக வட்டல்ஆப்பம் இடியப்பம்,பனியம் போன்றவை இரண்டாவது வருடம் அதேபோல மூன்றாவது வருடம் கொடுப்பார்கள்
          நோன்புசீரில் தக்கடி, சேமியாபிரியாணி, புரோட்டாசெட்,தோசைகறி , பிரியாணி போன்ற உணவுபொருட்கள் கொடுப்பார்கள்
          தக்கடி அதில் ஒரு சிறப்புவாய்ந்த உணவுபொருள் ஆகும் நெல்மாவுவில் வெங்காயம்,பச்சைமிளகாய்,உப்பு போட்டுகையால் கொலக்கட்டை பிடிபார்கள் அதுவும் நோன்புசீருக்கு என்றால் ஒருகூட்டமே இருந்து கொலக்கட்டைபிடிக்கும் மாவுவிற்கு ஏற்றபடி கறி சேர்த்து தக்கடிகூட்டுஉடன் சாப்பிடுவதற்கு நல்ல சுவையாக இருக்கும்
                        ஊரில் சில வருடங்களாக சஹர் வேளையில் குறைந்தவிலையில் சாப்பாடு கொடுக்கிறார்கள்  இரவே அதற்கான டோகேன் எடுக்க வேண்டும் நெய்சோறு வருவல் கோழிகுழம்பு பருப்புசாம்பார் ருபாய்110 சன்கேட்டரிங்,ஹோட்டல் பீமா,ஹோட்டல்தாஜ் போன்றவர்கள் நடத்துகிறார்கள்
           பைபாஸ் ருசி ஹோட்டலில் சஹர நேர சாப்பாடு சுடசுட இலவசமாகவே கொடுக்கிறார்கள்

3 கருத்துகள்:

  1. உணவுப்பொருட்களை வித விதமான ருசியில் செய்து உண்ணுவது நல்லது , ஆனால் ,சீர் என்ற பெயரில் வாங்குவதும் ,கொடுப்பதும் தவறல்லவோ ?

    பதிலளிநீக்கு
  2. இந்தக் கட்டுரைக்கு உரியவர் மருமகன் ஜப்பார் அவர்கள் தான்.தற்போது எழுதுவதை மிக நேசித்து துவக்கியுள்ளார்.முதல் கட்டுரையில் தான் சொல்ல நினைத்ததை மேலப்பாளையம் நடையில் சொல்லுகிறார்.நானும் இதில் ஒரு ஆசிரியனாக இருந்து கட்டுரைகள் வரைய வேண்டும்.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. என்னை முகநூலிலும் இது போன்ற கட்டுரைகள் மேடை பேச்சு என்று இந்த எளியவனுக்கு ஊக்கம் தந்து வளர்த்து விடும் எல்.கே.எஸ். அவர்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு