மேலப்பாளையம் முஸ்லிம் மேல்
நிலைப்பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை
ஆசிரியர் கீழ ஓம நல்லூர்
சின்ன பண்ணையார்
நல்ல பெருமாள் சார் அவர்கள்
மலரும் நினைவுகள்
இந்த கட்டுரையில் மேலப்பாளையம்
முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் அய்யா நல்லபெருமாள் சார்
அவர்களை பற்றி நமக்கு தெரிந்த விசயங்களை பகிர்ந்து கொள்வோம்
பெயரில் மட்டும் அல்ல
அவரது ஓவ்வொரு செயலிலும் நல்ல என்ற சொல் இல்லாமல் இல்லை
கோபம் என்பதோ மாணவர்கள்
செய்யும் தவறுக்கு தண்டனை என்பதோ அவரிடம் நாம் பார்த்ததே இல்லை. அன்று அல்ல இன்று
வரை அப்படி தான்
தவறு செய்யும் மாணவர்களை
அழைத்து அறிவுரை செய்வார்கள். அந்த அறிவுரையிலே அந்த மாணவனின் தவறு செய்யும் தன்மை
குறைந்து இருக்கும் அல்லது இல்லாமல் இருக்கும்.
எளிமையான மாமனிதர் அவரது
ஊரார்கள் அவரை சின்ன பண்ணை என்றும் மணியாரப்பிள்ளை என்றும் அய்யா என்றும் செல்லமாக
அழைக்கிறார்கள்.
கணக்கு பாடம் வகுப்பில்
எடுப்பார்கள் பாடம் எடுக்கும் போது மாணவர்களின் குறும்புதனத்திற்கு எல்லையே இல்லாத
அளவிற்கு சேட்டைகள் தொடரும் போதும் கோபபடாமல் தனது கோபத்தை கட்டுப் படுத்த பொருட்டு வெளியே சென்று மூக்கு பொடி போட்டு
கொஞ்சம் நேரம் கழித்து மறுபடியும் வகுப்பு எடுப்பார்கள். சிறந்த முறையில் கற்று
கொடுக்கும் தன்மை பெற்றவர்கள்.
ஒரு தடவை படம் நடத்தி
கொண்டு இருக்கும் போது மாணவர்கள் செய்த தொடர் சேட்டையினால் கண்ணில் நீர் கட்டி ஏம்பா
படிக்க இஷ்டம் இல்லைனா வெற்றிவேல் வானாமா மலை போன்ற டுட்டோரியல் சென்று படிக்க வேண்டியது
தானே ஏன் இங்கு வந்து மற்ற பையன்களையும் கேடுக்ரே என கோபபட்டார்கள் அவர்களின் அதிக
பட்ச கோபமே அதுதான்
மூக்கு பொடி போடும்
பழக்கம் மட்டுமே அவரிடம் காண முடிந்தது. ஒரு மனிதர் நல்லவராக இருக்கலாம் ஆனால்
எல்லோருக்கும் நல்லவராக இருக்க முடியுமாஎன்றால் ? இவர் அனைத்து தரப்பினர்களுக்குமே
குடும்பத்திலும் சரி, ஊரிலும் சரி நல்ல மனிதராகவே இருந்து இருக்கிறார். அவரது குணாதிசியங்களை
சொல்ல வேண்டும் என்றால் இமயத்தையும் உயர்ந்தே நிற்பார்.
கந்தசாமி உமா
தம்பதிகளுக்கு நான்காவது குழந்தையாக பிறந்தார். அவருடன் மூன்று சகோதரிகள் இரண்டு
தம்பிகள் ஆவர்.
நல்லபெருமாள் சாருக்கு
மூன்று பிள்ளைகள் இரண்டு பெண்மக்கள் ஒரு மகன். மகன் கந்தசாமி வங்கி பணியில்
மேலாளராகவும் மகள் உமா தபால் துறையில் அதிகாரியாகவும் மற்றொரு மகள் காந்தி சாந்தி
நகரில் வசித்து வருகிறார். இப்படியாக அவரது குடும்பத்தார்கள் நல்ல நிலையில்
சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள்.
நாம் பயன்படுத்த கூடிய
ஒவ்வொரு பொருளும் நல்ல பொருளாக இருக்கவேண்டும் என நினைப்போம். எல்லா
வற்றிலும் நல்லதை தேர்ந்து எடுக்கும் நாம்
நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்பதற்கு எந்த முயற்சியும் செய்வதில்லை
நல்ல மனிதனால் மட்டுமே
நல்ல மனிதனை உருவாக முடியும்
அதற்கு உதாரணம்
நல்லபெருமாள் சார் அவர்களே
அவர்களின் நல்ல
பண்புகளுக்கு உலகத்தில் நல்ல கூலியை கொடுத்து விட்டான். இதை விட சிறந்த கூலியை
மறுமையிலும் கொடுக்க இறைவனிடம் பிராத்திப்போம்
Mohideen Abdul Jabbar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக