அல் அமீன் கோச்சிங் சென்டர்
மேலப்பாளையம் அத்தியடிகீழத் தெருவில்
உள்ள ஹாமீம் நடுநிலைப் பள்ளியில் இயங்கி வந்த பிரபலமான டியூசன் சென்டர் அல் அமீன்
கோச்சிங் சென்டர் ஆகும். இதனை தண்டலெப்பை தெருவை சார்ந்த மரியாதைக்குரிய ஆசிரியர்
டி.எம்.காஜா அவர்கள். வெள்ளை லுங்கி முழுக்கை சட்டை அணிந்து அப்போது பிரபலமான
டி.வி.எஸ். 50 வண்டியில்
வருவார்கள். பின்பு பஜாஜ் கப் என்ற ஸ்கூட்டர் புதிதாக வாங்கி ஒட்டும்போது கீழே
விழுந்ததால் எடுத்த மூன்று அல்லது நான்கு தினங்களுக்குள் அதை கொடுத்து விட்டு
மீண்டும் டி.வி.எஸ். வண்டியே வைத்து தற்போது எக்ஸ்.எல். சூப்பர் வைத்து
இருக்கிறார்கள்.
அல்அமீன் காஜா என்றே அழைக்கபட்ட
அவர்களின் மாணவர்களுக்கு பாடம் சொல்லி தரும் நடைமுறை ஸ்டைலை பார்த்து ரசித்து
பாளையங்கோட்டையில் உள்ள சில மாணவர்களின் பெற்றோர்கள் நீங்கள் பாளையங்கோட்டைக்கு வாருங்கள்
உங்களுக்கு இடம் தருகிறோம். மேலும் மாத
பீஸாக ஒரு மாணவனுக்கு ருபாய் ஐம்பது தருகிறோம் எல்ல வசதிகளும் செய்து தருகிறோம் என
ஆசை வார்த்தைகள் பல கூறி அழைத்த போது அதை அன்போடு மறுத்து குறைவான பீஸ் என்றாலும்
பரவாயில்லை எனது சொந்த ஊரான மேலப்பாளையத்தில் வைத்து தான் டியூஷன் எடுப்பேன் என
பிடிவாதமாக மறுத்தார்கள். அந்த அளவிற்கு ஊர் மீதும் மாணவ மாணவியர்கள் மீதும் பற்று
பாசம்.

பத்தாம் வகுப்பில் அல்ஜிப்ரா ரெண்டு
வட்டகணக்கு மூணுவட்ட கணக்கு வட்டகோண
பரப்பு (வ.கோ.ப) ஜியாமெட்ரி,கிராப் போன்ற வற்றில் எளிதான முறையில் மதிப்பெண்கள்
எடுத்து பாஸ் மார்க் முப்பத்தைந்தை முதலில் நிறைவு செய்ய வேண்டும் என்பதே அவரின் தாரக
மந்திரம் ஆகும். அதன் பிறகு இரண்டு, ஐந்து மற்றும் ஒன் வேடு மதிப்பெண்களில்
கவனம் செலுத்தி சதம் எடுக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு இரண்டு குருப்
ஒன்று காலை ஏழு முதல் எட்டு மணிவரை மற்றொரு குருப் மாலை எட்டு முதல் ஒன்பது மணிவரை
நடைபெறும். பெரும்பாலும் மாலை வேளையில் அதிகமான மாணவர்கள் வருவார்கள்.
சூத்திரத்தை பாட்டு வடிவிலே சொல்லி
தருவார்கள். மேலப்பா ளையத்தில் சமயினா என்ற தைரா குருப் பாட்டு தான் மெட்டுகளாக
வரும். அவர் பாடிய பாட்டு ஒன்று ஒத்தையிலே நிக்கிறியே ஏமா கல்பு மெத்தையிலே
இருக்கலாம் வாமா என்ற மெட்டை வட்டகோண பரப்பளவு காண இரண்டு வட்ட மற்றும் மூன்று
வட்டகணக்கிற்கு பயன்படுத்துவார்கள்
இது எத்தன வட்ட கணக்கு ரெண்டு
வட்டகணக்கு ஒத்தையில நிக்கிறத சொல்லு
ஏஇக்கும்
ஸ்கோர் பீஇக்கும் ஸ்கோர் மேலே ரண்டு கீழே ரண்டு பிளஸ் எல்லாம் மைனஸ் மைனஸ் எல்லாம்
பிளஸ்
செய்லாத்துதான் மம்மாத்து மம்மாத்துதான் செய்லாத்து
செய்லாத்துதான் மம்மாத்து மம்மாத்துதான் செய்லாத்து
பீச்சாங்கை
பக்கம் சோத்தாங்கை பக்கம் (LEFT Hand SIDE RIGHT HAND SIDE)
இப்படியே பாட்டு ராகத்திலே நடக்கும் கிளாஸ் நடக்கும் போது இடையிடையே சிரிக்க கூடிய வகையில் காமடியோடு ஜாலியாக இருக்கும்
மாலை ஐந்து மணி முதல் தொடர்ந்து
வகுப்பு எடுப்பதால் பசியோடு சேர்ந்து சோர்வு வந்து விடுவதால் வி.எஸ்.டி
பள்ளிவாசலில் இருக்கும் மதினா கடை வடையும் ஆத்துரான் கடை காபி அவர்களுக்கு ரொம்ப
பிடிக்கும் நானோ அல்லது யாராவது வாங்கி வருவார்கள் வாங்கி சாப்பிட்டு விட்டு
கிளாஸ் இரவு பத்து மணி வரை தொடர்ந்து நடக்கும்.
வகுப்பறையிலே அரசியல்
பேச்சுக்கும் பஞ்சமே இருக்காது. அப்போது சார் அவர்கள் கடுமையான தி.மு.க அனுதாபி
கலைஞர் அவர்களை பற்றி பேசினால் கடும் கோபம் வரும். அடிக்கடி எங்களுக்குள்ளே
அரசியல் விமர்சனங்கள் விவாதங்கள் வரும்
நான் சார்ந்துள்ள கட்சிபற்றி வரும் போது நானும் விவாதம் செய்வேன். 1991 நடந்த பாளையங்கோட்டை
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட எல்.கே.எஸ். மீரான் மைதீன் அவர்களுக்காக தொடர்ச்சியாக
நானும் சில மாணவர்களும் வீடுவீடாக வோட்டு கேட்க டியூசனை கட் அடித்துவிட்டு சென்று
விடுவோம் அதற்கும் பலமாக வாங்கி கட்டி இருக்கிறோம்.
ஜாலி வித் ஜோலி இல்லைனா எல்லாமே
காலி என்று அடிக்கடி சொல்வார்கள் எதை
பற்றி பேசினாலும் அதிலே ராகத்தோடே பேசுவது கிளாஸ் போர் அடிக்காமல் ஜாலியாகவே செல்லும்
அதனாலே. கணக்கு புக்கை பார்க்காமலே கரும்பலகையில் அவர் சொல்லி கொடுக்கும் கணக்கு
நம்பர் ஏதும் மாறாமல் அப்படியே கொஸ்டின் பேப்பரில் வருவது தனிசிறப்பு அப்படியே
கணக்கு புக் தேவைபட்டால் ரா.காஜா என்று பக்கத்து வீட்டு பையன் படித்தான் அவனிடம் ரா நீ போனா புக்க
எடுத்துட்டு வரலான் என்பது போல எப்ப எதை பேசினாலும் காமடி கலந்து சிரிக்க
வைத்து மனதில் பதிய வைப்பது அவர்களின் தனி ஸ்டைலே ஆகும்.
பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு
ரிசல்ட் வந்தவுடன் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவியர்களின் பெயர் போட்டு வால்போஸ்டர்
ஒட்டுவதற்கு அவரே நேரில் செல்வார்கள். தொடரும்......
Mohideen Abdul Jabbar
நகரில் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர் அல் அமீன் காஜா சார்.
பதிலளிநீக்குஏணி,தோணி,ஆசிரியர் என்கிற வரிசையில் தான் இருக்கும் இடத்தில் நிலைத்து பிறரை உயர்த்தி,கரை சேர்த்து அழகு பார்ப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் நமக்கு தந்த கல்வி அறிவு தான் நம்மை நம் வருங்காலத்தை அமைத்துத் தந்தது. ஆசிரியர் அல் அமீன் காஜா அவர்களின் கல்விப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
All true...I'm proud to say I'm his student....
பதிலளிநீக்கு