புதன், 16 அக்டோபர், 2013

தலைமையாசிரியர் நல்லாசிரியர் ஷேர் அலி கான் அவர்கள்



தலைமையாசிரியர் நல்லாசிரியர் மரியாதைக்குரிய

ஷேர் அலி கான் அவர்கள்
                 

          அனைவருக்கும் எங்களது பிளாக்ஸ்பாட் சார்பாக தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்

                 மேலப்பாளையம் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியின் வரலாற்றில் தனி முத்திரை பதித்த நல்லாசியர். திருச்சியில் சார் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்த போது அந்த பெயருக்கு ஏற்றார்போல் பொருத்தமாகவே காட்சியளித்தார்.
                உருது மொழியில் ஷேர் என்றால் சிங்கம்
               மொகலாயர் சாம்ராஜ்யத்தில் உயர்பதவிகளை வகிக்கும் அதிகாரிகளுக்கு கான் பட்டம் கொடுத்து அழைப்பார்கள்.  
                சார் அவர்கள் நடந்து வரும் அழகு சிங்கம் வருவது  போலவே கம்பீரமாகத்தான் இருக்கும்.
                  சார் அவர்கள் 29-06-1937 பிறந்தார். கல்வி பணிக்கு தான் விரும்பியே வந்தார்கள் ஆசிரிய பணி அறப்பணி அதற்கே தன்னை அற்ப்பணி என சொல்லுவார்கள் அதே போலவே சார் அவர்கள் முதன் முதலில் வனத்துறையில் ஆறு ஆண்டுகாலம் பணியாற்றிய பின்பு ஆசிரிய பணியின் மீது உள்ள தாக்கத்தின் காரணமாக அந்த பணியினை ராஜினாமா செய்து விட்டு 1965 ஆம் ஆண்டு கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் தனது கல்வி பணியினை தொடங்கி மதுரை அல் அமீன் மேல் நிலைப்பள்ளியிலும்  பணியை தொடர்ந்து  நமதூர் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளிக்கு 1987 ஆம் ஆண்டு தொடந்து தனது ஓய்வு காலம் வரை பல அறிய சாதனைகள் பல புரிந்து ஊர் மக்களோடு ஒன்றி பழகி எண்ணிலடங்கா பல நல்ல உள்ளங்களில் இடம் பிடித்தார். முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியில் ஒன்பதாண்டு காலம் செய்த சாதனைகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கபட வேண்டிய காலமே ஆகும். சார் அவர்களின் பணிக்காலத்தில் முதலில் செய்த சேவையே மகத்தானது. நமது பள்ளிகூடத்திற்கு அரசு அங்கீகாரம் பெற்று தந்ததே ஆகும். இது அவரது சாதனைகளின் கிரீடம் என்றே சொல்லலாம். அடுத்த சாதனையாக அந்த நேரத்தில் நமதூர் மாணவர்கள் அரசு பொதுத்தேர்வுகள் எழுத ஜங்ஷனில் உள்ள எம்.டி.டி. மேல் நிலைப்பள்ளி கூடத்திற்கு தான் சென்று எழுத வேண்டிய கால கட்டம். தேர்வு எழுத சொல்லும் போது பல இன்னல்களை மாணவ மாணவியர்கள் சந்தித்த அனுபவங்கள் பல உண்டு. குறிப்பாக சைக்கிளில் செல்லும் போது பஞ்சர் ஆவது அதனால் ஏற்படும் பதட்டத்தால் படித்த விடைகள் எல்லாம் மறக்கும் சூழ்நிலைகள் இப்படி சொல்லி கொண்டே போகலாம். சார் அவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வரலாற்று படம் எடுத்து கொண்டு இருந்த போது அந்த நிகழ்வினை மாவட்ட கல்வி அதிகாரி அவர்கள் பார்த்து லயித்து போய் என்ன செய்ய வேண்டும் உங்களுக்கு சொல்லுங்கள் செய்கிறேன் என்றதுமே எங்கள் பள்ளிக்கூடத்திற்கு அரசு தேர்வு எழுத மையம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். உடனே அடுத்த ஆண்டே உத்தரவு வந்தது. அந்த வருடம் முதல் நல்ல ரிசல்ட்டும் கிடைத்தது.
                     காலையில் பிரையர் நடக்கும் போது ஐந்து நிமிடங்கள் தினந்தோறும் மாணவர்களிடத்தில் நல்ல போதனைகள் செய்வதும்,நன்கு படிக்கும் மாணவர்களையும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று கோப்பைகள் வாங்கி வரும் மாணவர்களையும் அந்த நேரத்தில் அனைவரின் முன்னிலையில் பெருமைபடுத்தி பாராட்டி பேசி மற்ற மாணவர்களையும் ஊக்குவிப்பதும் சார் அவர்களின் சிறந்த பண்புகளாகும்.
                      காலையிலும் மதிய வேளையிலும் வகுப்பு ஆரம்பித்த உடன் தலைமையாசிரியர் அறையில் இருந்து கம்பீரமாக நடந்து அனைத்து வகுப்பிலும் நடக்கும் படங்களை கண்காணித்த படியே நடந்து செல்வார். அவ்வாறு செல்லும் போது எந்த வகுப்பிலாவது அந்த வகுப்பு ஆசிரியர் விடுமுறையில் இருந்தால் அந்த வகுப்பறைக்கு சென்று மாணவர்களிடம் அன்பாக பேசி மகிழ்வது அவர்களின் தனி சிறப்பாகும். ஒரு முறை சார் அவர்கள் நடந்து வரும் போது வகுப்பறையில் பாடம் எடுத்து கொண்டு இருந்த மைதீன் லெப்பை சார் அவர்கள் வெளியே வந்து சார் அவர்களிடம் என்ன சார் உடல் நிலை சரியில்லையா என கேட்டார்கள் அதற்கு சார் அவர்கள் எப்படி கண்டு பிடித்தீர்கள் என கேட்டபோது சார்  நீங்கள் நடந்து வரும் போது பார்பதற்கு கம்பீர தோற்றமளிக்கும்  இன்று அந்த தோற்றம் உங்களிடத்தில்  இல்லை ஆகவே கேட்டேன் என்றார்கள். ஆம் இன்று எனக்கு உடல் நிலை சரியில்லை தான் அந்த அளவிற்கு பணி காலத்தில் ஓய்வு இல்லாமல் சுறுப்பாக பணியாற்றிய பெருமைக்கு சொந்தகாரர். பொதுவாக தலைமையாசிரிய பணி ஓய்வில்லாத பணியே ஆகும்.
                      சார் அவர்களின் பணிகாலத்தில் தான் பத்தாம்வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இரவு படிக்கும் முறையை நடை முறைக்கு கொண்டு வந்து சிறப்பாக நடத்தினார். மாலையில் பள்ளிகூடம் முடிந்த உடன் நைட் ஸ்டடி ஆரம்பமாகும். மாணவர்கள் கண்காணிக்க ஆசிரியர்கள் இருந்தாலும் சார் அவர்களும் கண்காணித்த படி அங்கும் மிங்கும் வலம் வந்து மாணவர்களை படிக்க ஆர்வமூட்டி வருவார்.  
                    விளையாட்டு தினத்தை கோலாகலமாக கொண்டிட வழிவகுத்தவர். ஸ்போர்ட்ஸ் டே மிக சிறப்பாக பல முக்கிய பிரமுகர்கள் மாவட்ட ஆட்சிதலைவர், மாவட்ட காவல் துறை அதிகாரிகளை விழாவிற்கு அழைத்து வந்த பெருமை சார் அவர்களையே சாரும். விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவிப்பதும் அவர்கள் மீது தனி கவனம் செலுத்தி ஆலோசனைகள் கூறுவதும் அவரது தனி சிறப்பிலும் ஒன்றாகும். சார் அவர்களின் பணிக்காலத்தில் பள்ளிகூட கட்டிடங்கள் வளர்ந்து கொண்டு வந்தது என கூறலாம்.
                      கல்வி  சுற்றுலாவிற்கு முக்கியத்துவம் கொடுத்தது மாணவர்களை அழைத்து செல்வதும். ஆசிரியர்களை அழைத்து பள்ளி வரலாற்றிலே முதன் முதலாக ஆல் இந்தியா சுற்று பயணம் மேற்கொண்டதும் சார் அவர்களின் பணிக்காலத்தில் தான். குறிப்பாக ஜெய்ப்பூர், டெல்லி, ஆக்ரா மற்றும் சுற்றி உள்ள இடங்களை பார்வையிட்டு வரும் போது போகும் போதும் நாக்பூரில் ஓவிய ஆசிரியர் ரஹ்மான் சார் அவர்களின் சம்மந்தி கடும் மழையிலும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கு சூடான பிரியாணியும் சூடான அல்வாவும் கொடுத்தது உபசரித்ததை மேலப்பாளைய மக்கள் உபசரிப்பில் உயர்ந்தவர்கள் என்ற சிந்தனையையும் நன் மக்கள் என்ற எண்ணத்தையும் வரவழைத்து வாழ் நாளில் நெஞ்சை விட்டு நீங்காத நிகழ்வாகவே சார் அவர்களுக்கு இருந்தது.
               மேலும் சார் அவர்களின் மென்மையான போக்கும், பணியின் தனித் திறமையும் நம் மக்களின் மீது உள்ள அன்பின் காரணமாகவும் அவர்கள் இல்லத்தில் நடக்கும் அனைத்து விஷேச காரியங்களில் சிறப்பு விருந்தினராகஅழைக்கப்பட்டு கவுரவிக்க பட்டு இருக்கிறார்கள். நமதூரின் உணவு வகைகளில் ஒன்றான நெய்சோறு பருப்பு கத்தரிக்காய் (தால்ச்சா) மட்டன் குருமா அந்த ருசிகளை இன்றளவும் மறக்காமல் சொன்ன விதம் நாம் தாயார் செய்து கொண்டு வந்து இருக்கலாமோ என்ற எண்ணம் நம்மிடம் வந்தது.
                 சார் அவர்களை கண்ணியபடுத்தும் விதமாக ஊரில் நிறுவனங்களின் விழாகளுக்கும்  கட்டிட திறப்பு விழாகளுக்கும்   அழைத்து தலைமை தாங்க வைத்து அழகு பார்த்ததும். பள்ளி கூடங்களில் நடக்கும் விழாக்களில் சார் அவர்களை அழைத்து சிறப்பு செய்ததையும் சார் அவர்கள் இன்றும் நினைத்து பெருமிதம் கொண்டார்கள். சார் அவர்கள் நடந்து தெருக்களில் செல்லும் போது பெண்கள் எழுந்து நின்று மரியாதை செய்ததையும் வாழ் நாளில்  மறக்க முடியாத நிகழ்வே என பெருமிதம் கொண்டார். நான் மேலப்பாளைய வாசியாக ஆக வேண்டும் என எண்ணம் மேலோங்கியே இருந்தது.
                    நமதூர் மக்கள் மேல் உள்ள பிரியத்தின் காரணமாக தனது மகளை தெற்கு மைதீன் ஜமாஅத்தினர நடத்தும் பள்ளி கூடத்தில் மிக சொற்ப அளவிலான மாத ஊதியம் ருபாய் 300 க்கே பணி செய்ய வைத்தார். அந்த நேரத்தில் குறைந்த பட்ச சம்பளம் ருபாய் 2500 ஆக இருந்தது. இது சார் அவர்களின் சேவை மனப்பான்மையை அறிவதற்கு இதுவும் ஒரு உதாரணம் ஆகும்.
                   
                 சார் அவர்களின் கல்வி பணியினை பாராட்டி 1990-1991 ஆம் ஆண்டு சிறந்த ஆசிரிய பணிக்கான நல்லாசிரியர் விருது அறிவித்தது. அந்த மகிழ்ச்சி கரமான சந்தோசத்தை ஊரே கொண்டாடியது. சார் அவர்கள் சென்னையில் விருது வாங்கி ஊர் வந்த போது ரயில்வே நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்து அழைத்து வந்தார்கள். மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பு சார்பாக சார் அவர்கள் வாழ்த்தி சுவரொட்டிகள் ஒட்டி தங்களது மகிழ்ச்சியினை வெளிபடுத்தினர். மேலப்பாளையம் முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியின் வரலாற்றில் முதன்முதலில் நல்லாசிரியர் பட்டம் வாங்கிய பெருமையும் சார் அவ்ர்களியே சாரும்.
                  பள்ளிகூடத்தில் சக ஆசிரியர்களோடு நண்பர்கள் போலவே பழகுவார். ஆசிரியபெருமக்களோடு இணைந்து பல சாதனைகள் புரிந்தார். சார் அவர்களுக்கு நாம் நன்றி கடன் பட்டுள்ளோம். சார் அவர்களின் சேவைக்கு நம்மை விட நம்முடைய ரப்பே கூலி கொடுக்க சிறந்தவன். இம்மையிலும் மறுமையிலும் சிறந்த நற்கூலியை வல்ல ரஹ்மான் கொடுப்பானாக ஆமீன். நீண்ட ஆயுளும் சிறந்த சரீர சுகத்தையும் கொடுக்க அனைவரும் துவா செய்வோம்    

Mohideen Abdul Jabbar
               

செவ்வாய், 15 அக்டோபர், 2013

மர்ஹூம் வரலாற்றாசிரியர் அலிமித்தீன் ஷாகுல் ஹமீது அவர்கள்



மர்ஹூம் வரலாற்றாசிரியர் அலிமித்தீன் ஷாகுல் ஹமீது அவர்கள் 

அனைவருக்கும் எங்களது தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்             

                       முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியின் ஆசிரியர்களில் தனி முத்திரை பதித்தவர் உதவி தலைமையாசியர் மர்ஹூம் அலிமித்தீன் ஷாகுல் ஹமீது அவர்கள். வகுப்பறையில் பயன்படுத்தும் பாடி லேங்க்வேஜ் நமதூரில் பயன்படுத்தும் சொற்களை எதார்த்தமாக அவர்கள் பேசும் பேச்சினை இன்று நினைத்தாலும் நமக்கு சிரிப்பு வந்துவிடும்.
                     21-05-1942 ஆம் ஆண்டு பிறந்தார். முதன் முதலில் கல்வி பணியினை எட்டு மாதகாலங்கள் சென்னை ஜமாலியா மேல் நிலைப்பள்ளியில் ஆரம்பித்து 17-11-1967 ஆம் ஆண்டு மேலப்பாளையம் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியில் கல்வி பணியினை தொடந்தார்.
                   ஆங்கிலம், வரலாறு, புவியியல் பாடம் அழகாகவும் மிகவும் தத்ருபமாக எடுப்பார்கள். சார் அவர்களின் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்றார்போல மிக ஜாலியாகவே நடைபெறும். வகுப்பறையில் சிரிப்பிற்கு பஞ்சமே இருக்காது.
                      எந்த அளவிற்கு ஜாலியாக இருப்பார்களோ அந்த அளவிற்கு கோபமும் வரும். சார் அவர்கள் கோபம் வந்து அடிக்க ஆரம்பித்தால் மாணவர்கள் மிரண்டு போகும் அளவிற்கு  அடியும் விழும்.
                       சார் அவர்கள் வராண்டாவில் நடந்து வரும் அழகே தனி தான். ஒரு  கையில் புஸ்தகங்களோடும் ஒரு கையில் சிறிய சாட்டை கம்பு கொண்டு வருவார்கள். மாணவர்கள் ஆங்கிலத்தில் பிழையில்லாமல் எழுத அதிக மாக டிகேடேசன் செய்து எழுத்து பயிற்சி கொடுப்பதில் அதிக கவனம் எடுப்பார்கள். அதே போல வரலாறு,புவியியல் பாடங்கள் எடுக்கும் போதும் தமிழில் இலக்கண பிழையில்லாமல் எழுத தமிழ் வார்த்தைகளை டிகேடேட் செய்யும் முறைக்கு சார் அவர்களின் மாணவர்கள் மீது உள்ள தனது ஆர்வத்தின் வெளிப்பாடே எனலாம்.
                       பாடம் நடத்தும் போது வகுப்பறையில் இரண்டு கைகளிலும் குச்சியை (சாட்டைகம்பு) வைத்தது அசைத்து அசைத்து பேசும் விதம் இன்றும் நம் கண் முன்னே தோன்றுகிறது. ஆங்கிலத்தில் ஒவ்வொரு எஸ்ஸை நடத்தி முடிந்த உடன் வகுப்பில் மறுநாள் டெஸ்ட் வைப்பது அதே போல வரலாற்று பாடங்கள் முடிந்த உடன் டெஸ்ட் வைத்து மாணவர்களை தேர்விற்கு தயார் படுத்து வதில் அதிக கவனம் எடுத்து செயல்படுபவர். அமைதியாக பாடம் நடந்து கொண்டு இருக்கும் போது இடையூராக ஒரு சில மாணவர்கள் கோரசாக சார் சொல்லுவதியே திரும்ப சொல்லும்போது ஏவம்லே ஏறும மாடு மாடு மாடு என சொல்லும் அழகு இன்று நினைத்தாலும் நம்மை அறியாமல் சிரிப்பு வருவதை நம்மால் கட்டுபடுத்த முடிவதில்லை.
                   காலாண்டு அரையாண்டு தேர்வுகளில் சார் அவர்கள் ஏய் இந்த எஸ்ஸை வரும் ஆகவே மானபாடம் செய்து கொள்ளுங்கள் என கூறுவார். தேர்வுவின் போது அந்த எஸ்ஸை வராத போது மாணவர்கள் வகுப்பறையில் சார் நீங்கள் சொன்ன எஸ்ஸை வரவில்லையே என கேட்கும் போது ஆமலே செத்தவனே சொன்னேன் வரல சாவா சொல்றே என சொல்லும் போது அவரது உடல் ஸ்டைலை நினைத்தால் அதை சொல்ல இயலாது அனுபவித்து பார்க்கவே வேண்டும் அற்புதமாக இருக்கும். சார் அவர்கள் பள்ளிகூடம் முடிந்து வகுப்பில் டியூசன் எடுப்பார்கள் அதற்க்கு ஒரு மாணவனிடம் இரண்டு ருபாய் பீஸ் வாங்கு வார்கள். எளியபட்ட மாணவர்களிடம் எந்த கட்டணமும் வாங்காமல் சொல்லி கொடுப்பது, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு பல ஆண்டு வினாத் தாளை சேகரித்து மாணவர்களுக்கு கொடுப்பது, நல்ல மாணவர்களை ஊக்குவிப்பதும், சேட்டை செய்யும் மாணவர்களை அழைத்து இதுவரை நீ படிக்கல அது  ஒழிஞ்சி போதுலே ஏல ஒருமாசைக்கி படிலே என கெஞ்சும் தன்மை சார் அவர்களின் சிறந்த குணமே என்றால் அது மிகையாகாது.
                காலாண்டு அரையாண்டு தேர்வு எழுதும் போது தேர்வு ஹாலில் மாணவர்கள் தேர்வு எழுத தேவைப்படும் கூடுதல் பேப்பர் வாங்க அவர்கள் இடத்தில் எழுந்து நின்று கேட்க வேண்டும் அப்படி கேட்கும் போது தமாசாக மூத்தவா கிழிக்கிற கிலிக்கு கொண்டுவந்து கொடுக்கனும் வாலா என சொல்லுவதும் சார் அவர்களின் தனி ஸ்டைலே ஆகும்.  1997 ஆம் ஆண்டு தனது ஹஜ் கடமையை பூர்த்தி செய்தார். சார் அவர்கள் தந்து கல்வி சேவையை 31-05-2000 ஆம் ஆண்டு நிறைவு செய்கிறார்கள். சுமார் முப்பத்திரண்டு ஆண்டு ஆறு மாதம் சார் அவர்களின் கல்வி சேவை மனதில் தனியிடம் பெற்றதே ஆகும். வல்ல ரஹ்மான் அன்னாரின் பிழை பொறுத்து மறுமை வாழ்க்கையை பிரகாசமாக்கி வைப்பானாக ஆமீன்

Mohideen Abdul Jabbar