ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

மேலப்பாளையம் காயிதேமில்லத் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி

மேலப்பாளையம்

காயிதேமில்லத் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியின் இளம் சாதனையாளர்களை பாரீர்! பாரீர்!! பாரீர்!!!



           இன்றைய காலகட்டத்தில் கல்வி என்பது இன்றியமையாத ஒன்றாக மனிதனுடைய வாழ்க்கையை ஒன்றி விட்ட ஒன்றாகும்.
            தரமான கல்விக்காக மக்கள் இன்று செலவு செய்யும் பணம் ஏராளம்! ஏராளம்!!

            அப்படி கல்விக்காக அதிகமாக பணத்தை செலுத்தி தரமான கல்வி கிடைக்கிறதா? என்பது கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது.
              குழந்தையின் ஆரம்பக்கல்விலிருந்து ஒன்பதாம் வகுப்புவரை ஒரு  பள்ளியில் தொடர்ந்து படிக்கும் மாணவ மாணவியரை  ஏதாவது ஒரு காரணம் சொல்லி பள்ளி கூடத்தில் இருந்து நீக்கப்படுகின்றனர். அப்படி நீக்கப்பட்ட அந்த மாணவ, மாணவியர்கள் பிற பள்ளிகூடத்தை தேடி அலைகின்றனர். காரணம் அவர்கள் ஆரம்பத்தில் படித்த பள்ளிகூடம் தேர்ச்சி சதவீதம் குறைந்து விடும் என்பதற்காக அவர்கள் கழற்றி விடபடுகிறார்கள்.
               அந்த மாணவ மாணவியர்களின் நிலை தான் என்ன?
               பெற்றோர்களின் கனவுகளும் வீணாக்கபடுகிறது. இதன் காரணமாக அதிக அதிகமான மாணவ மாணவியர்களின் தொடர்கல்வி பாதிக்கபடுகிறது. பெற்றோர்களின் கனவு நனவாகவும் தொடர்கல்வியை தொடரவும். ஆரம்பத்தில் இருந்தே ஒதுக்கப்பட்ட அரசினர் பள்ளிக்கூடங்கள் தான்  அவர்கள் கைகளோடு கை கோர்த்து அரவணைக்கிறது. அதற்கு ஒரு உதாரணம் நமது ஊரில் அமைந்துள்ள நான்கு மேல் நிலைப்பள்ளிகளில் ஒன்று கண்ணியத்திற்குரிய என அனைத்து தரப்பு மக்களால் அழைக்க கூடிய மாபெரும் தலைவர்  காயிதேமில்லத் அவர்களின் பெயரில் வீற்று இருக்கும் காயிதேமில்லத் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியும் ஒன்று.
                காயிதேமில்லத் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் பிற பள்ளிகூடத்தால் கைவிடப்பட்ட அதாவது சதவீதம் பறிபோகிவிடும் என்ற அச்சத்தால் கழற்றி விடப்பட்ட மாணவ மாணவியர்கள் சேர்ந்து வெற்றியே கண்டு உள்ளார்கள். காரணம் காயிதேமில்லத் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளிக்கு கிடைத்த  தலைமையாசிரியரும் அவர் தலைமையில் சிறப்பாக பணி புரியும் ஆசிரிய பெருமக்களே ஆவர். அவர்கள் ஒவ்வொரு மாணவ மாணவியர்களின் மீதும் தனி கவனம் செலுத்தி அவர்களின் முன்னேற்றத்திற்காக எவ்வித சுயநலமின்றி உழைக்கக் கூடிய ஆசிரிய பெருமக்கள் கிடைத்தது  எங்கள் ஊருக்கு ஒரு வரப்பிரசாதமே ஆகும்.
                  அவர்கள் ஆசிரியப்பணி அறப்பணி அதற்கே தன்னை அற்ப்பணி என்பார்களே அதற்க்கு ஒப்பானவர்கள்.
                   பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு பள்ளி ஆரம்பம் முதலே காலை 8.30 மணி முதல் 9.15 மணி  வரை சிறப்பு வகுப்புக்கள் எடுக்கபடுகிறது. மேலும் மாலையில் பள்ளி முடிந்த உடன் சிறப்பு வகுப்புக்கள் தொடர்கிறது. பள்ளிகூடத்தில் பணி புரியும் பெரும்பான்மையான ஆசிரிய பெருமக்கள் அருகில் உள்ளவர்கள் அல்ல மாறாக இரண்டு மூன்று பேருந்துகள் மாறி மாறி பயணித்து வரக்கூடியவர்கள். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
                மாணவ மாணவியர்களின் தனித்தன்மைகள் வெளிபடுத்தும் விதமாக தலைவர்கள் பிறந்த தினம் சுதந்திரதினம் குடியரசு தினம் போன்ற தினங்களில் கட்டுரை, பேச்சு,  கவிதை, ஓவியம், பாட்டு, விளையாட்டு, நடனம் போன்ற பல போட்டிகளை நடத்தி பரிசுகளும் கொடுக்க படுகிறது. இதில் வியக்கதக்க விஷயம் என்ன வென்றால் போட்டிகளுக்கு குறைவான அவகாசங்களே கொடுக்க படுகிறது அதாவது ஓரிரு















































































































நாட்கள் மட்டுமே காரணம் மாணவர்களின் தனித்தன்மையை வெளிபடுத்தவே ஆகும்.
                  கடந்த 23-08-2013 அன்று நடந்த அறிவியல் கண்காட்சியும் மிக குறைவான அவகாசங்கள் அதாவது இன்று காலை அறிவித்து மறுநாள் கண்காட்சி ஆரம்பம் அதில் மாணவ மாணவியர்களின் தனித்தன்மைகள் நன்கு வெளிபட்டது. அந்த கண்காட்சியை நேரில் கண்ட நாமும் வியர்ந்தோம்.
                  அந்த கண்காட்சியிலே குறிப்பிட தக்க வேண்டிய விஷயம் பன்னிரண்டாம் வகுப்பை சார்ந்த மாணவிகள் பவித்ரா, வேல்மணி, கதிஜா, தில்சாத், இசக்கியம்மா, சுதா, சுலைகா, மர்சுக்கா, காஞ்சனா, தஸ்லீமா மற்றும் ஆறாம் வகுப்பு வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாணவ மாணவியர்கள் செய்த விஞ்ஞான விநோதங்களை கண்டு வியந்தோம் குர்ஷித் குர்லீன், ஷபானா, அக்ரம் வாகியா,  பரீதா, சிரீன், அனீஸ்பாத்திமா, ரோஷன், நாதிரா, ஷர்மிலா, முஹமது மைதீன், முஹமது அலி, பாசித் மனோகர், கலீல், அப்துல் காதர், சுஹைல் மற்றும் பல மாணவ மாணவியர்களின் படைப்புகள் நன்றாகவே  இருந்தது குறிப்பாக எலுமிச்சைபழம் மற்றும் உருளைகிழங்கு ஆகியவற்றில்  இருந்து குண்டு ஊசி மூலம் கரண்டு எடுத்து எல்.சி.டி. பல்பை எறிய வைத்த படைப்பு தனி சிறப்பாக இருந்தது. ஏற்கனவே தற்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஷபானா என்ற மாணவி கடந்த ஆண்டே எலுமிச்சைபழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்தார் என்பது கூடுதல் தகவல் ஆகும்.
                 இந்த கண்காட்சிகளை தலைமையாசிரியர் வி.திலகர், ஆசிரயைகள் ஜவஹர்நிஷா, ஜீவா, ஜாய் கிருபை, மனோ, ஆனந்தி, ஜெனிஸ் ஸ்டெல்லா, ஸ்டெல்லா புளோரின், கஸ்தூரி, கஸ்தூரிவரதராஜன், சுனிதா, ஜெயக்கொடி, இசபெல்லா, தேவிராணி, விஜயலட்சுமி, தாயம்மா, உமா, சுஜாதா, காந்தா, ஷிபா, ரஹ்மத்நிஷா, பொன்மதி, மல்லிகா ,மகேஸ்வரி, டேசிராணி, ரஜினி, ராஜேஸ்வரி மற்றும் ஆசிரிய பெருமக்கள் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து இருந்தார்கள்
                ஆரம்பத்தில் இந்த பள்ளி நடுநிலைப்பள்ளியாக இருந்து பின்பு உயர்நிலைப்பள்ளியாகவும் தற்போது மேல்நிலப்பள்ளியாக உயர்ந்து இருக்கிறது.
                  மேல் நிலைப்பள்ளியாக மாறிய பிறகு தொடர்ந்து இதுவரை பன்னிரெண்டாம் வகுப்பு அரசுபொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்து வருகிறது
                    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக பட்சம் நூறு சதவீதமும் குறைந்த பட்சமாக 97.5 இதுவரை எட்டி உள்ளது
                     இந்த பள்ளியிலே படித்த மாணவர்கள் கல்வியாளர்களாக மருத்துவர்களாக பொறியாளர்களாக சிந்தனைவாதிகளாக உள்ளூர் மற்றும் வெளி நாடுகளில் சிறந்த முறையிலே பணி புரிகிறார்கள் என்பது குறிப்பிடதக்கதாகும்
                      இன்ஷாஅல்லாஹ் வரும் காலங்களில் நூற்றுக்கு நூறு பெறுவதற்கு எல்லாம் வல்ல இறைவனின் ஆசியாலும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் ஒத்துழைப்போடு வென்று  காயிதேமில்லத் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி ஒரு மைல் கல்லாக அமையும் என்பதிலே ஐயம் இல்லை

குறிப்பு;
        மாணவர்கள் காரணம் இல்லாமல் நீண்ட விடுப்பு எடுப்பது ஆசிரியைகளால் கொடுக்கபட்ட வீட்டு பாடங்களை சரியாக செய்யாமல் இருப்பது பள்ளி வேளை நேரங்களில் தேவை இல்லாமல் வெளியே சுற்றி திரிவது ஆசிரியர்களுக்கு சரியான முறையில் கட்டுப்படாமல் இருப்பது அதை கண்டிக்கும் பட்சத்தில் சிபாரிசுகாக ஆட்களை கூட்டி வருவது போன்றவைகள் தவிர்க்கும் பட்சத்தில் நமது ஊரில் முதன்மை பள்ளிக்கூடமாக திகழும்  மாணவர்களும் பெற்றோர்களும் அவர்களின் கடமைகளை உணர்ந்து செயல்படவேண்டும். இதற்கு ஒத்துழைப்பு தருமாறு அனைத்து தரப்பையும் அன்போடு வேண்டுகிறோம்

Mohideen Abdul Jabbar